வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பணம் பறிமுதல்
08 Feb,2016
சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பெருந்தொகைப் பணம் பறிமுதல்
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்லப்படவிருந்த பெருந்தொகை வெளிநாட்டு நாணயங்கள் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
சிங்கப்பூர் சென்ற விமானத்தின் பயணியொருவரை இன்று அதிகாலை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்ட போது அவர் தனது ஆசனவாய்க்குள் 30 ஆயிரம் யூரோ நாணயத்தாள்களை பதுக்கி வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, குறித்த யூரோ நாணயத்தாள்களை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர். 55 வயதுடைய குறித்த சந்தேகநபர் ஒரு இலங்கையர் என தெரியவந்துள்ளது.
அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட யூரோ நாணயங்களின் இலங்கைப் பெறுமதி ஐம்பது லட்சம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.