போர்க்குற்ற விசாரணையை ஆரம்பிக்க வேண்டிய நிலையில் இலங்கை!
08 Feb,2016
போர்க்குற்ற விசாரணையை ஆரம்பிக்க வேண்டிய நிலையில் இலங்கை! - ஹுசேனின் வருகையால் அரசுக்குள் முரண்பாடு
ஜெனீவா தீர்மானத்துக்கு அமைவாக போர்க்குற்ற விசாரணையை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டிருப்பதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயித் ராத் அல் ஹூசேனின் கொழும்பு விஜயத்தின் பின்னர் இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் இதனால் நல்லாட்சி அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் தோன்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சில அமைச்சர்கள் ஆணையாளர் அல் ஹூசேன் யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்குச் சென்றமை தொடர்பாக அதிருப்பதியடைந்துள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் சிலரும் விரும்பவில்லை. இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் மூத்த அமைச்சர்கள் சிலர் நேற்றிரவு வாதாடியதாக தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிபதிகள், சர்வதேச நிபுணர்கள் ஆகியோர் அடங்கிய கலப்புமுறை நீதிமன்றத்திற்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றும் உள்ளக பொறிமுறை ஒன்றின் மூலமே போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்படும் என்பதை ஆணையாளர் அல் ஹூசேனிடம் அரசாங்கம் வற்புறுத்த வேண்டும் எனவும் அமைச்சர்கள் சிலர் வாதிட்டுள்ளனர்.