இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகை மீனவர்கள் 29 பேர் விடுதலை:
19 Jan,2016
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகை மீனவர்கள் 29 பேர் விடுதலை: திரிகோணமலை கோர்ட்டு உத்தரவு
நாகை மீனவர்கள் 29 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
நாகப்பட்டினம், ராமேசுவரம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
அவர்கள் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை கடந்த சில நாட்களுக்கு முன் சிறை பிடித்து சென்றது.
மீனவர்களை விடுதலை செய்ய கோரி பிரதமர் மோடிக்கு முதல் –அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதி இருந்தார்.
இந்த நிலையில் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த 29 மீனவர்கள் இன்று திரிகோணமலை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
அவர்கள் இன்னும் சில நாட்களில் சொந்த ஊர் திரும்ப உள்ளனர். மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதை கேள்விப்பட்டதும் அவர்களது உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.