யுத்தத்தில் பாலியல் வன்முறைகளை தடுக்கும் பிரகடனத்தில் இலங்கை கையொப்பம்!
13 Jan,2016
யுத்தத்தில் பாலியல் வன்முறைகளை தடுக்கும் பிரகடனத்தில் இலங்கை கையொப்பம்!
யுத்தத்தின் போது பாலியல் வன்முறைகளை தடுக்கும் சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கையொப்பமிட்டுள்ளது. யுத்தத்தின் போது பாலியல் வன்கொடுமைகள் துன்புறுத்தல்களை இல்லாதொழிக்க அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாக இலங்கை அறிவித்துள்ளது. 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் திகதி நியூயோர்க்கில் இந்த பிரகடனம் அறிமுகம் செயப்பட்டது, இதில் 122 உறுப்பு நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. இந்த பிரகடனத்தில் நேற்று வரை மொத்தமாக 155 உறுப்பு நாடுகள் கையொப்பமிட்டுள்ளன.

அனைவரினதும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
புலிகளை ஒழித்த இரகசியங்களை வெளியிடக் கூடாது! - ஒமல்பே சோபித தேரர்
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு படையினர் பயன்படுத்திய வழிமுறைகளை வெளிப்படுத்தக் கூடாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் குறித்த விசாரணைகளின் ஊடாக தேசிய பாதுகாப்பிற்கோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தக் கூடியதாக அமைந்தால் அது அச்சுறுத்தல் ஏற்பட்டால் அது ஆபத்தானது எனவும் அவர் தெரிவித்தார்.

எக்னெலிகொட கொலை தொடர்பில் ஸதம்பித்திருந்த விசாரணைகள், முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். எனினும், விசாரணைகளின் ஊடாக தேசியப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்கள் கசிவது ஆபத்தானது. இவ்வாறு தகவல் கசிவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. 30 ஆண்டு கால பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு படையினர் பயன்படுத்திய வழிமுறைகளை வெளிப்படுத்தக் கூடாது. அவ்வாறு வெளிப்படுத்துதல் பாரிய குற்றமாகவே பார்க்க வேண்டும் என ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.