விண்வெளி மர்மப் பொருளுக்கு என்ன நடந்தது?
13 Nov,2015
விண்வெளி மர்மப் பொருளுக்கு என்ன நடந்தது?
இலங்கையின் தென் கடற் பிராந்தியத்தில் இன்று முற்பகல் விழுமென தெரிவிக்கப்பட்ட மர் ம விண்பொருள் தொடர்பில் எவ்வித அவதானிப்பும் பதியப்படவில்லையென கோள்மண்டலம் தெரிவித்துள்ளது.
WT 1190 எப் என பெயரிடப்பட்டிருந்த குறித்த விண் பொருள் இன்று முற்பகல் 11.49 மணியளவில் , தென் கடற்பிராந்தியத்திலிருந்து 62 கடல் மைல் தொலைவில் விழுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்தகைய எதுவும் குறித்த கடற்பகுதியில் விழவில்லையென சுட்டிக்காட்டப்படுகின்றது.
எனினும் மர்மப் பொருள் தொடர்பில் பல்வேறு விதமான தகவல்கள் , வெவ்வேறு மூலங்களை மேற்கோள்காட்டி வெளியாகியிருந்தன.
இதற்காக தெற்கு கடற்கரைப்பகுதியில் அவதானிப்புப் பணிகளிலும் பலர் இறங்கியிருந்தனர்.
அதன்படி குறித்த மர்மப் பொருளானது இன்று மாலை 6.30 மணியளவில் புவியில் தாக்கத்தை ஏற்படுத்துமென ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஆதர்சி கிளார்க் நிலையத்தை மேற்கோள்காட்டியே இச்செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த பொருள் புவியின் மேற்பரப்பை அண்மித்ததும் எரிந்து சாம்பலாகியுள்ளதாக வேறு சில செய்திகள் தெரிவிக்கின்றன.
இது மட்டுமன்றி சமூகவலைதளங்களில் , குறிப்பாக டுவிட்டர் ஊடாகவும் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.