ராஜபக்ஷ நிர்மாணித்த அதிசொகுசு நிலக்கீழ் மாளிகை அதன் படங்கள்
24 Oct,2015
கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் அதிசொகுசு நிலக்கீழ் மாளிகையொன்று அமைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
தற்போது அதன் படங்களை சிங்கள மொழி இணையம் ஒன்று வெளியிட்டுள்ளது.
குறித்த நிலக்கீழ் மாளிகைக்கு 24 மணிநேரமும் துண்டிக்கப்பட முடியாத வகையில் ஏ.சி. வசதி செய்யப்பட்டுள்ளது. இதனை ராஜபக்ஷவினரே நிர்மாணித்துள்ளனர்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி மாளிகையின் மாதாந்த மின் கட்டணம் ஒன்றரைக்கோடி செலவாகின்றது. அதில் நிலக்கீழ் மாளிகையின் மின் செலவு மட்டுமே முப்பது லட்சம் செலவாகின்றது.
இதன் காரணமாகவே நான் வேறொரு சாதாரண வீட்டை உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்துகின்றேன். எனது தற்போதைய இல்லத்தின் மொத்த பராமரிப்புச் செலவே மாதாந்தம் ஐந்து லட்சம் மட்டுமே செலவாகின்றது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அதன் படங்கள் இவை.