நாவற்குழியில் மக்கள் வெளியேற்றப்படுவதை தடுத்து நிறுத்தினார் விஜயகலா
27 Sep,2015
நாவற்குழியில் மக்கள் வெளியேற்றப்படுவதை தடுத்து நிறுத்தினார் விஜயகலா
நாவற்குழியில் உள்ள அரச காணியில் தற்காலிக குடிசைகள் அமைத்து வசித்து வந்த 12 குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துவதற்கு சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
நாவற்குழி ஐயனார் கோவிலடி பகுதியில் அரச காணியினுள் தற்காலிக குடிசைகள் அமைத்து 12 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
அவர்களை உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு தேசிய வீடமைப்பு அதிகாரசபை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் மகஜர் ஒன்றினை நேற்றைய தினம் அமைச்சர் விஜயகலாவிடம் கையளித்திருந்தனர்.
அதன் போதே இதற்குரிய தீர்வு எடுக்கும் வரை குறித்த குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையை தற்கலிகமாக நிறுத்தி வைக்குமாறு யாழ். மாவட்ட அரச அதிபருக்கும், தேசிய வீடமைப்பு அதி கார சபை யாழ். மாவட்ட முகாமையாளருக்கும் அமைச்சர் அறிவித்துள்ளார்.