ஐ.நா மனித உரிமை ஆணையாளருடன் மங்கள சமரவீர பேச்சு! கூடியீ சூநறள
13 Sep,2015
ஐ.நா மனித உரிமை ஆணையாளருடன் மங்கள சமரவீர பேச்சு! கூடியீ சூநறள
ஜெனிவா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ ஆகியோர் நேற்று மாலை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நாயகம் செய்ட் அல் ஹுசேனை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். இந்த பேச்சுகளின் போது ஐ.நா.மனித உரிமை அலுவலகத்தினால் தயார் செய்யப்பட்டுள்ள இலங்கை விவகாரம் குறித்த அறிக்கை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமில்லையென்றும் அமைச்சர் மங்கள சமரவீரவும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரிடம் தெரிவித்துள்ளனர். அத்துடன் விரைவில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்ளக விசாரணை பொறிமுறை முன்னெடுக்கப்படும் என்றும் இலங்கை தூதுக்குழு தரப்பில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு உறுதியும் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் மனித உரிமை நிலைமைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அமைச்சர் மங்கள சமரவீரவும் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைனுக்கு எடுத்துக் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோவும் கலந்து கொண்டிருந்தார்.