சர்வதேச ஆதரவைப் பெறுவதற்காக இரு ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை வெளியிடுகிறது அரசாங்கம்!
13 Sep,2015
சர்வதேச ஆதரவைப் பெறுவதற்காக இரு ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை வெளியிடுகிறது அரசாங்கம்!
ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளுக்கு இணையாக இலங்கை அரசாங்கம் இரு முக்கிய ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. காணாமற் போனவர்கள் தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு இதனை இம் மாத இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமென உயர்மட்ட அரச வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆணைக்குழுவின் தலைவரும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசருமான மெக்ஸ்வல் பரணகம ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்த அறிக்கையை இரு வாரங்களுக்கு முன்னர் கையளித்தார். சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல் அல்லது இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்கள். அவை மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான சிபார்சுகள் போன்றவற்றை இந்த ஆணைக்குழு அறிக்கை முக்கியமாகத் தொட்டுக் காட்டியுள்ளது.
இளைப்பாறிய நீதிபதி நிஸ்ஸங்க உடலகம தலைமையிலான ஆணைக்குழு அறிக்கையும் பிரசுரமாக உள்ளது. 17 அரச சார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக இந்த ஆணைக்குழு விசாரணை மேற்கொண்டது. ஜனாதிபதியிடம் இது தொடர்பான இடைக்கால அறிக்கை ஏற்கனவே கையளித்திருந்தது. இக்குழுவின் அறிக்கை ஒரு போதும் வெளியிடப்படவில்லை. மகிந்த ராஜபக்ச ஆட்சியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இந்த அறிக்கையை பிரசுரிக்க சிபார்சு செய்திருந்தது.