ஜெனிவா கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!
13 Sep,2015
ஜெனிவா கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!
ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30 வது அமர்வு இன்று ஆரம்பமாகிறது. அமர்வின் முதல் நாளான இன்று இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் ஆராயப்படவுள்ளது. இதில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ‘இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்கச் செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல்’ என்னும் தலைப்பில் உரை நிகழ்த்துவார்.

ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் 30 வது அமர்வு இன்று முதல் எதிர்வரும் அக்டோபர் மாதம் 02 ஆம் திகதி வரை நடைபெறும். இந்த அமர்வில் கலந்து கொள்ளுவதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையிலான குழுவொன்று ஜெனீவா சென்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையில் சட்டத்தரணிகள் குழுவொன்றும் ஜெனீவா பயணமாகியுள்ளது.
ஐ. நாவுக்கான இலங்கையின் வதி விடப்பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க அமர்வின் ஏனைய செயற்பாடுகளை பொறுப்பேற்று முன்னெடுத்துச் செல்வார். ஐ. நா மனித உரிமைகள் ஆணை யாளர் அலுவலகத்தினால் இலங் கையின் மனித உரிமைகள் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை எதிர்வரும் 30 ஆம் திகதியன்று மனித உரிமைகள் பேரவையில் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்படும். மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் சம்பிரதாயப்படி இலங்கை மீதான அறிக்கையின் பிரதி, அரசாங்கத்திடம் ஒப்படை க்கப்பட்டிருப்பதாகவும் அதற்கு எழுத்து மூலமான பதிலை வழங்குவதற்காக வெளிவிவகார அமைச்சு ஐந்து நாட்கள் கால அவகாசம் கோரியிருப்பதாகவும் ஜெனீவா தகவல்கள் தெரிவிக் கின்றன.