தாய்வானில் இருந்து இலங்கையர் நாடுகடத்தப்பட்டார்
05 Sep,2015
தாய்வானில் இருந்து இலங்கையர் நாடுகடத்தப்பட்டார்
இலங்கையர் ஒருவர் தாய்வான் ஊடாக ஜெர்மனுக்கு சட்டவிரோத கடவுச்சீட்டுடன் விமானத்தில் பயணிக்க முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர், அந்த நாட்டின் தேசிய குடிவரவு நிறுவக சிறப்புப் படையினரால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
இந்த இலங்கையர் சிங்கப்பூரில் இருந்து ஜேர்மனிக்கு செல்லும் நோக்குடன் சீன விமானம் ஒன்றில் தாய்வான் சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் வைத்திருந்த செங்கன் வீசாவில் மாறுபாடுகள் தென்பட்டமையை அடுத்தே அவர் நாடு கடத்தப்பட்டார்.
இலங்கையில் அரசியல் ஸ்திரமின்மைக் காரணமாகவே தாம் ஜேர்மனிக்கு செல்ல முயற்சித்ததாக அவர் தாய்வான் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
தாஜுடீன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஷிரந்தியிடம் விசாரணை?
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை செய்யயப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் வாரத்தினுள் ஷிரந்தி ராஜபக்சவை நான்காம் மாடிக்கு அழைத்து விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த கொலைக்கு பயன்படுத்தப்பட்ட டிபென்டர் வாகனம் ஷிரந்தி ராஜபக்சவினால் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த டிபென்டர் வாகனம் இவ்வாறான பல கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில தகவல் கிடைத்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
ஷிரந்தி ராஜபக்சவின் பயன்பாட்டிற்காக செஞ்சிலுவைச் சங்கத்தினால் குறித்த வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இதற்கு முன்னர் ரஞ்சன் ராமநாயக்கவினால் தகவல் வெளியிடப்பட்ட போதிலும் மஹிந்த தரப்பினரால் அவை நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.