இந்தியாவிடம் கே.பியை ஒப்படைக்க தயாராகும் இலங்கை?இலங்கையுடனான உறவுக்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கும் மோடி உறுதி

04 Sep,2015
 

              


  .
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய, குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பியை அந்நாட்டிடம் ஒப்படைக்க தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இது தொடர்பில் இந்தியா கோரிக்கை விடுத்தால், கே.பி ஒப்படைக்க தயார் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு தொடர்பில் இந்திய பொலிஸாருக்கு, கே.பி முக்கியமான நபராகும். கே.பி தற்போது வரையிலும் இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பை பெற்று வருகின்றார்.

 

அவர் 2009ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 05ஆம் திகதி மலேசியாவில் வைத்து இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவு ஊடாக கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையுடனான உறவுக்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கும்- சந்திரிகாவிடம் மோடி உறுதி

 .
இலங்கையுடனான உறவுக்கு இந்தியா தொடர்ந்தும் முக்கியத்துவம் அளிக்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

நேற்று புதுடெல்லியில் இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புதுடெல்லியில் நடக்கும், உலக இந்து- பௌத்த மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள, சந்திரிகா குமாரதுங்கவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்தச் சந்திப்பில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இந்திய வெளிவிவகாரச் செயலர் ஜெய்சங்கர் உள்ளிட்ட இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்காவில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில், அமைதியான முறையில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டதற்கு வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வகித்து வரும் தலைமைத்துவப் பங்கு மற்றும் இந்திய- சிறிலங்கா உறவுகளை வலுப்படுத்துவதில், சந்திரிகா குமாரதுங்க ஆற்றிவரும் பங்களிப்பை இந்தியப் பிரதமர், வரவேற்றுள்ளார்.

ஒன்றபட்ட இலங்கை  என்ற கட்டமைப்புக்குள் எல்லா சமூகங்களினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும், மெய்யான நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு, சந்திரிகா தொடர்ந்தும், முக்கிய பங்காற்றுவார் என்று நரேந்திர மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கையுடனான உறவுகளுக்கு இந்தியா தொடர்ந்தும் முக்கியத்துவம் அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருநாடுகளும், வரலாற்று, கலாசார, உறவு ரீதியாக ஆழமாக பிணைந்திருக்கின்றன என்றும், இந்த உறவுகளை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வதற்கு, சிறிலங்காவின் அதிபர் மந்றும் பிரதமருடன் இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் இந்தியப் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜும், இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். எனினும், இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை




Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies