போர்க்குற்ற விசாரணை தொடர்பான உள்ளகப்பொறிமுறை அமெரிக்காவிடம் கையளிப்பு
27 Aug,2015
போர்க்குற்ற விசாரணை தொடர்பான உள்ளகப்பொறிமுறை அமெரிக்காவிடம் கையளிப்பு
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பிலான உள்ளக பொறிமுறையின் விசாரணை அம்சங்களை இலங்கை அரசாங்கம், அமெரிக்க அரசாங்கத்திடம் கையளித்துள்ளது.
இந்தத் தகவலை அரசாங்கத்தின் உயர்மட்டத்தரப்பு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வருகை தந்திருந்த நிஷா பிஸ்வாலிடம் இந்த பொறிமுறை கையளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்தின் குறித்த பொறிமுறை குறித்து பிஷ்வால் தமது மகிழ்ச்சியை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொறிமுறையின் கீழ் நீதியை நிலைநாட்டுதல் மற்றும் 90ஆம் ஆண்டுகளில் தென்னாபிரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு ஒத்தவகையில் இந்த பொறிமுறை அமைந்துள்ளது.
இதேவேளை சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நல்லிணக்க அமைச்சு ஒன்று அமைக்கப்படவுள்ளது.
இது பெரும்பாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போர்க்குற்றங்களுக்கான உள்ளக விசாரணைப் பொறிமுறை! வரைபு தயாரிப்பதில் அரசாங்கம் நாட்டம்
போர்க்குற்றங்கள் தொடர்பிலான உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கான வரைபை தயாரிப்பதில் அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்துள்ளது.
சர்வதேசத்திடம் இருந்து வரும் அழுத்தங்களைத் தவிர்க்கும் வகையில் இந்த விசாரணைப் பொறிமுறை அமைய வேண்டும் என்பதில் அரசாங்க உயர்மட்டத்தினர் கரிசனை கொண்டுள்ளனர்.
அமெரிக்காவின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் உருவாக்கப்படும் இந்த வரைபு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதன் பின்னர் மனித உரிமை ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகள் இலங்கையின் அறிக்கை தொடர்பில் தமது முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.