இலங்கை, மாலத்தீவு தூதராக இந்திய அமெரிக்கர் நியமனம்
07 Aug,2015
இலங்கை, மாலத்தீவு தூதராக இந்திய அமெரிக்கர் நியமனம்
இலங்கை, மாலத்தீவு நாடுகளுக்கான அமெரிக்கத் தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அதுல் கேஷப் நியமிக்கப்பட்டுள்ளார்.
44 வயதாகும் அதுல் கேஷப், தெற்காசியப் பகுதிக்கு தூதராக நியமிக்கப்படும் இரண்டாவது அமெரிக்க இந்தியர் ஆவார். ஏற்கெனவே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிச்சர்டு ராகுல் வர்மா இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக பணியாற்றி வருகிறார்.
அதுல் கேஷப், ரிச்சர்டு ராகுல் வர்மா ஆகிய இருவருமே பஞ்சாப் மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1994-ஆம் ஆண்டு முதல் வெளியுறவுப் பணியாற்றி வரும் அதுல் கேஷப், இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் அதிகாரியாக இருந்துள்ளார்.
தற்போது வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரிவில் துணைச் செயலராக அவர் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில் இலங்கை, மாலத்தீவு நாடுகளுக்கான தூதராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.