கடத்தப்பட்ட தபால் பொதிகளில் வாக்காளர் அட்டை?
06 Aug,2015
கடத்தப்பட்ட தபால் பொதிகளில் வாக்காளர் அட்டை?
வாக்காளர் அட்டைகளை கொள்ளையிடும் நோக்கத்துடன் சாவகச்சேரி தபால் நிலையத்திலிருந்து தனக்கிளப்பு தபால் நிலையத்துக்கு நேற்று புதன்கிழமை (05) கொண்டு செல்லப்பட்ட தபால் பொதிகள் மீட்கப்பட்டள்ளன.
எனினும் பறித்துச்செல்லப்பட்ட தபால் பொதிகள் சிலவற்றை, தனக்கிளப்பு பகுதியிலிருந்து மீட்டதாக சாவகச்சேரி காவல்துறை தெரிவித்துள்ளது.
தபால் ஊழியர்களால் கொண்டுசெல்லப்பட்ட இந்தப் பொதிகளை மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பில் தபால் ஊழியர்களால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தனக்கிளப்புப் பகுதியில் இரண்டு தபால் பொதிகள் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். அங்கு பொலிஸாருடன் சென்ற தபால் ஊழியர்கள் அவற்றை மீட்டுள்ளனர்.
சம்பவத்தையடுத்து தபாலகங்களிற்கான பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் காவல்துறை நிலைகொள்ள வைக்கப்பட்டுள்ளது.