இலங்கையில் தேர்தல் பிரச்சாரத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி-11 பேர் படுகாயம்
31 Jul,2015
இலங்கையில் தேர்தல் பிரச்சாரத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி-11 பேர் படுகாயம்
இலங்கையில் ஐக்கிய தேசிய ஜனநாயக கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளராக ரவி கருணநாயக்க உள்ளார். இவருடைய ஆதரவாளர்கள் இன்று இலங்கையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது 2 வேன்களில் வந்த மர்ம நபர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்து விட்டதாகவும், 11 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் யார் என்பது மர்மமாக உள்ளது.