இலங்கையில் இராணுவ மயமாக்கல்கள் தொடர்கின்றது.
29 Jul,2015
இலங்கையில் இராணுவ மயமாக்கல்கள் தொடர்கின்றது.
இலங்கையில் இராணுவ மயமாக்கல்கள் நிறுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ள போதிலும் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தைப் போன்றே தொடர்ந்தும் இராணுவ மயமாக்கல் நடவடிக்கைகள் தொடர்வதாக ஆங்கில ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
களுகங்கை பிரதேசத்தில் இராணுவத்தினரால் முகாமைத்துவம் செய்யப்படும் லாயா லெசர் ரிசோர்ட் என்னும் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கார்பிரேட் தரத்திற்கு குறித்த ஹோட்டல் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
நிர்வாக சபையின்இ பிரதம நிறைவேற்று அதிகாரியான மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க புனரமைப்பு ஆரம்ப நிகழ்வின் பிரதம அதிதியாக பங்கேற்றுள்ளார்.
இந்த ஹோட்டலின் அனைத்து முக்கிய பொறுப்புக்களும் இராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிவிலியன் விவகாரங்களில் தலையீடு செய்யப் போவதில்லை என அறிவிக்கப்பட்ட போதிலும் தொடர்ந்தும் இராணுவத்தினர் பல்வேறு சிவிலியன் விவகாரங்களில் தலையீடு செய்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இளம் பெண் சுட்டுக்கொலை! ஈபிடிபி உறுப்பினருக்கு மரணதண்டனை
மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் கடந்த 2007ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த, ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவருக்கு நேற்று மட்டக்களப்பு மேல்நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2007ஆம் ஆண்டு டிசெம்பர் 25 ஆம் நாள் வந்தாறுமூலை ஏபீசி வீதியைச் சேர்ந்த கே.எஸ்.பிரேமாவதி (வயது 25) என்ற குடும்பப் பெண் அவரது வீட்டில் கணவனுடன் உறங்கிக் கொண்டிருந்த வேளை, துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக, ஈ.பி.டி.பி உறுப்பினர் திலகன் என அழைக்கப்படும் பாலுதாஸ் கைது செய்யப்பட்டு, மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கில் குற்றம் நிருபிக்கப்பட்டதை அடுத்து, திலகன் என அழைக்கப்படும் பாலுதாசுக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார் மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி சந்திரமணி.