திருகோணமலையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட மனித எச்சங்களை மீட்கும் பணி
08 Jul,2015
திருகோணமலையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட மனித எச்சங்களை மீட்கும் பணி
திருகோணமலை நகர சபைக்கு சொந்தமான மெக்கெய்சர் விளையாட்டு மைதானம் கடந்த 2014ம் ஆண்டு புனரமைக்கும் போது மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து புனரமைப்பு பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டு மனித எச்சங்கள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதே வேளை மீண்டும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை திருகோணமலை நீதவான் முன்னிலையில் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
திருகோணமலை நீதவான் ஈ.சரவணராஜா முன்னிலையில் இப்பணிகள் நேற்று இரண்டாவது நாளாகவும் பொலிஸ் பாதுகாப்புடன் அகலப்பட்டு வருகின்றது. இதன்போது மண்டையோடு ஒன்றும் கை எலும்பும் மீட்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு எவரும் அனுமதிக்கப்படவில்லை. நிலஅளவையாளர்கள், சட்ட வைத்திய அதிகாரிகள் ஆகியோரும் அங்கு சமூகமளித்திருந்தனர்.