ஐ.நா ஆணைக்குழு அறிக்கையில் மஹிந்த, கோட்டா, பசில், பொன்சேகா உள்ளிட்ட 42 பேருக்கெதிராக போர்க்குற்றச்சாட்டு
27 Jun,2015
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையில் மஹிந்த, கோட்டா, பசில், பொன்சேகா உள்ளிட்ட 42 பேருக்கெதிராக போர்க்குற்றச்சாட்டு
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் செப்டம்பரில் வெளியிடப்படவுள்ள விசாரணை அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட 42 பேருக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 42 பேரில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சஇ பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாஇ முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச உள்ளிட்டோரும் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்களப் பத்திரிகை ஒன்று இந்த தகவலை இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.
இலங்கை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரால் நியமிக்கப்பட்ட குழு இந்த அறிக்கையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் குறித்த அறிக்கையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கையளிக்க அந்தக் குழு எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.