இலங்கை பாராளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறிசேனா உத்தரவு ஆகஸ்ட் 17ஆம் தேதி தேர்தல்
26 Jun,2015
இலங்கை பாராளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறிசேனா உத்தரவு
ஆகஸ்ட் 17ஆம் தேதி தேர்தல்
இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டிருக்கிறார்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இந்தக் கலைப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்தக் கலைப்பின் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான கூட்டு அமைச்சரவையின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.
ஆகஸ்ட் 17ஆம் தேதி புதிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நியமிக்கப்பட்டார்.
225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு இதற்கு முன்பாக 2010ஆம் ஆண்டில் தேர்தல் நடைபெற்றது
இலங்கை பாராளுமன்றத்தைக் கலைத்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தை உடனடியாக கலைத்துவிட்டு வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என அதிபர் தேர்தலின்போது சிறிசேனா வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதிக்கு ஏற்ப, பாராளுமன்றத்தை கலைப்பதற்கான உத்தரவில் இன்று கையொப்பமிட்ட சிறிசேனா, அந்த உத்தரவை அரசு அறிவிப்பாணையாக வெளியிட அனுப்பியுள்ளார்.
225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை உள்ள நிலையில் முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக இப்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த மகிந்த ராஜபக்சே தற்போது அரசியலில் தீவிரம் காட்டாமல் உள்ளார். அவரது மனைவி, மகன் மற்றும் தம்பிகள் ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளனர். எனவே, அரசியலில் மீண்டும் அதிகாரம்மிக்க இடத்தை பிடிக்க முடிவு செய்துள்ள அவர், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.