தனது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் அழிக்க சூழ்ச்சி செய்யப்படுகின்றது
17 Jun,2015
தனது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் அழிக்க சூழ்ச்சி செய்யப்படுகின்றது!– மஹிந்த
கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் அழிப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வலஸ்முல்ல சித்தம்கல ரஜமஹா விஹாரையில் நடைபெற்ற ஆசீர்வாத போதி பூஜையில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கம் மத்தள விமான நிலையத்தை மூட முயற்சிக்கின்றது, அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்யப் பார்க்கின்றது.
அதிவேக நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகளை நிர்மாணிக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
எமது அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட சகல அபிவிருத்தி திட்டங்களையும் இல்லாமல் ஒழிக்க முயற்சிக்கப்படுகின்றது.
கிராமப் பாதைகள் காபட் செய்யப்பட்டுள்ளன இதனால் கிராமங்களின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது.
தென் மாகாணத்தில் பாரியளவில் பாதைகளை நிர்மாணிப்பதற்கும் புனரமைப்பதற்கும் உலக வங்கி, ஆசிய வங்கி நிதி உதவிகளை வழங்குவதாக உறுதியளித்திருந்த நேரத்தில் நாம் தேர்தலில் தோல்வியைத் தழுவினோம்.
ஆட்சியாளர்கள் இந்த திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
கிராமங்ளை அபிவிருத்தி செய்ய இந்த அரசாங்கத்திற்கு அவசியமில்லை.
இந்த அரசாங்கம் கடுமையான குரோத உணர்வுடன் செயற்பட்டு வருகின்றது.
ஆட்சியாளர்கள் குரோத உணர்வுடன் ஆட்சி நடத்துவது மக்களை பெரிதும் பாதிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.