எதிர்காலத்தில் பாதுகாப்புப் படையினருக்கு அரசியலில் ஈடுபட தடை: ஜனாதிபதி
எதிர்காலத்தில் பாதுகாப்புப் படையினர் அரசியலில் ஈடுபட தடை செய்யப்பட்டுள்ளது என்று ஜனா
திபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலனறுவை மெதிரிகிரியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இதன் பிறகு வரும் காலங்களில் முப்படை, பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினருக்கு அரசியல் தடைசெய்யப்பட்டுள்ளது.
சட்டத்தை செயற்படுத்தி அதனைப் பாதுகாக்கும் பொறுப்பு மாத்திரமே அவர்களுக்கு உள்ளது.
எமது நாட்டு இராணுவம் ஒழுக்க சீரான இராணுவம் எனபதை முழு உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இனிவரும் காலங்களில் சகல பாடசாலைகளிலும் மாணவர் படையணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அங்கு தெரிவித்தார்.
இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக பயிலரங்கில் சிறிலங்காவும் பங்கேற்பு
பிரான்சின் லியோன் நகரில் இன்று ஆரம்பமாகும், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஐந்து நாள் அனைத்துலக பயிலரங்கில் சிறிலங்காவும் பங்கேற்கவுள்ளது
இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வது குறித்த இந்த நான்காவது அனைத்துலக பயிலரங்கை, அனைத்துலக காவல்துறையான இன்ரபோல் ஒழுங்கு செய்துள்ளது.
அனைத்துலக காவல்துறையின், போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் பணியகம் ஏற்பாடு செய்துள்ள இந்த பயிலரங்கில் 30 நாடுகள் கலந்து கொள்கின்றன.
இதில் சிறிலங்காவில் சார்பில், முன்னாள் காவல்துறைப் பேச்சாளரான சட்டவாளரும், மூத்த காவல்துறை கண்காணிப்பாளருமான அஜித் ரோகண கலந்து கொள்ளவுள்ளார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் சன்ட்ரா பெய்டாஸ் தலைமையிலான நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பயிலரங்கில் சிறிலங்கா பங்கேற்பது முக்கித்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஐ.நா விசாரணைக்குழுவின் அறிக்கை வரும் செப்ரெம்பரில் வெளியிடப்படவுள்ளது.
அதேவேளை, இன்று ஆரம்பமாகும் இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்த பயிலரங்கில், பல்வேறு விடயங்கள் ஆராயப்படவுள்ளன.
மனித உரிமைகளுக்கான ஐரிஷ் நிலையம், அயர்லாந்து கல்வே தேசிய பல்கலைக்கழகம், ஜேர்மனியின் சமஷ்டி குற்றக்காவல் பணியகத்தின் மத்திய போர்க்குற்ற பிரிவு, அனைத்துலக அனைத்துலக குற்றவியல் பிரிவு, ருவாண்டாவின் தேசிய சட்டமா அதிபர் அதிகாரசபை, கனேடிய நீதித் திணைக்களத்தின் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் பிரிவு, அனைத்துலக குற்றவியல் தீர்ப்பாய ஐ.நா பொறிமுறை, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம், முன்னாள் யூகோஸ்லாவிய அனைத்துலக குற்றவியல் தீர்ப்பாயம், வொசிங்டனில் உள்ள அனைத்துலக காவல்துறையின் வன்முறைக் குற்றங்கள் மற்றும் தீவிரவாத முறியடிப்பு பிரிவின் தேசிய மத்திய பிரிவு ஆகியவற்றின் மூத்த பிரதிநிதிகள் இந்த பயிலரங்கில் கலந்து கொள்ளவுள்ளனர்.
அனைத்துலக காவல்துறையான இன்ரபோல், ருவாண்டா மற்றும் யூகோஸ்லாவியாவில் போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் குறித்த விசாரணைகளில் ஈடுபட்டது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அனைத்துலக தரத்துடன் பார்க்குற்றச்சாட்டுகள் குறித்து உள்ளக விசாரணைகள் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்த விசாரணைகளுக்கு அனைத்துலக காவல்துறையின் உதவி கோரப்படலாம் என்று தகவல்கள் தெரிவிப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.