செய்திகள் மகிந்தவை சந்திக்கிறது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு

28 May,2015
 

மகிந்தவை சந்திக்கிறது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு


 
 


எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் போட்டியிடுவதற்கு அவசியமான பின்னணியை அமைத்துக்கொள்வதற்காக அதன் தலைவர்கள்  இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்திக்கவுள்ளனர்.


இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கட்சி தலைவர்கள் நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்கள்.

கூட்டணியில் தொடர்புடைய 14 கட்சி தலைவர்கள் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடி இணக்கப்பாட்டினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்வதாக கூட்டணியின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த வாரத்தில் கூட்டணியின் அரசியல் கட்சி தலைவர்கள் சந்திப்பில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டப் போது  எட்டப்பட்ட தீர்மானத்திற்கமைய இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் 100 நாட்கள் நிறைவடைந்துள்ளதனால் அரசாங்கத்தின் அதிகாரத்தை ஐ.ம.சு.கூட்டணி  பெற்றுக்கொள்ள வேண்டும். கூட்டணி என்ற ரீதியில் எதிர்வரும் பொது தேர்தலுக்கு முகம் கொடுப்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிக்கு இடையில் கலந்துரையாடப்படவுள்ள விடயம் தொடர்பில் கூட்டணி கட்சி தலைவர்களின் இணக்கப்பாட்டிற்கமைய இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணி பிளவடைந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி நினைத்தாலும் அவ்வாறான எவ்வித பிளவுகளும் காணப்படவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரபல கூட்டணி மற்றும் மேலும் அரசியல் கட்சிகளை இணைத்துக்கொண்டு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு மகத்தான வெற்றியினை பெற்றுக்கொள்ளவுள்ளளோம் என கூட்டணியின் பொது செயலாளர் சுசில் பிரேம ஜயந்த வெளியிட்டுள்ளார்.


20வது திருத்தச் சட்டம் தொடர்பில் மேலும் திருத்தங்கள்



புதிய நாடாளுமன்றத்தில் கிடைக்கும் ஆசனங்களின் எண்ணிக்கை தொடர்பாக சிறிய கட்சிகள் எதிர்ப்புகளை வெளியிட்டு வருவதால், 20வது அரசியலமைப்புத் திருத்தம் சட்டம் குறித்து அமைச்சரவையால் இறுதி தீர்மானத்திற்கு வர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வது குறித்து அமைச்சரவை நேற்று இறுதி முடிவை எடுக்கவிருந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை அமைச்சரவையில் தாக்கல் செய்திருந்தார்.

எனினும் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகளின் அமைச்சர்கள் தமது கட்சிகளுக்கு இந்த திருத்தச் சட்டத்தின் மூலம் அநீதி ஏற்படும் எனக் கூறி, அதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து திருத்தங்களை செய்து பிரச்சினையை தீர்க்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.


கைதானவர்களின் விடுதலைக்கு வவுனியா சட்டத்தரணிகள் உதவவேண்டும்



விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு இனிமேல் எழுகை பெறுவது முடியாத காரியம் என்பது உறுதியாகிவிட்டது. எனினும் விடுதலைப் புலிகள் மீது தாளாத பற்றுக் கொண்டவர்கள் அவர்களின் மீள் எழுகையை ஆர்வத்தோடு எதிர்பார்க்கின்றனர்.

அதேநேரம் விடுதலைப் புலிகளோடு சேர்ந்து நின்று தங்களின் காரியங்களை கச்சிதமாகச் செய்து முடித்த தரப்பினர் விடுதலைப் புலிகள் ஒருபோதும் வரக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.இதில் மூன்றாவது தரப்பு பொதுவானது. விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் புலிகளின் சில செயற்பாட்டை விமர்சித்தவர்கள். எனினும் தமிழ் மக்களின் நலன்களில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள். இப்போது கூட சமூக அக்கறையோடு அவர்களின் செயற்பாடும் சிந்தனையும் இருப்பதைக் காணமுடிகிறது.

இத்தகையவர்கள் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வுக்காக ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற ஆதங்கத்தோடு சமூகப் பணிகளில் மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுவே எங்களின் தற்போதைய நிலைமை.

இது ஒருபுறம் இருக்க, மகிந்தவுக்கும் மைத்திரிக்குமான வித்தியாசம் என்ன? புலிகள் மீள வரமுடியாது என்பது தெரிந்திருந்தும் மீண்டும் புலிகள் வரக்கூடிய சந்தர்ப்பம் உண்டென மகிந்த ராஜபக்இ தென்பகுதியில் பிரசாரம் செய்தார்.

ஆனால் மைத்திரியோ மீண்டும் புலிகள் வர முடியாது என்பதை நிறுத்திட்டமாகத் தெரிந்து வைத்துக் கொண்டு, புலிகள் பற்றிய விடயத்தை தனது பேச்சில், பிரசாரத்தில் எடுத்துக் கொள்ளாமல் விட்டார்.

வர முடியாததை வரும் என்றவர் தோற்றார். வராதது வராததுதான் என்றவர் வென்றார். இது மகிந்த-மைத்திரி பற்றிய ஒப்பிடுகை. சரி, விடுதலைப் புலிகள் இனிமேல் மீள் எழுகை பெற முடியாது என்பதை மகிந்தவும் மைத்திரியும் எவ்வாறு அறிந்திருந்தனர் எனில், விடுதலைப் புலிகள் மீளெழுவதை தமிழர் தாயகத்தில் உள்ள புத்திஜீவிகளில் ஒரு பகுதியினர்; அதிக இலாபம் உழைக்கும் தரப்பினர்; புலிகளின் ஆசியால் அரசியல் நடத்தும் புண்ணியவான்கள் என்போர் ஒருபோதும் விடமாட்டார்கள் என்பதை மகிந்தவும் மைத்திரியும் தெரிந்து வைத்திருந்தனர்.

இதை நாம் இங்கு கூறும்போது தங்களுக்கு இது எப்படித் தெரியும் என்று நீங்கள் கேட்டால் அதில் தவறில்லை என்பதுடன் உங்கள் கேள்விக்கு விளக்கம் தருவதும் நம் கடமை.

கடந்த 20ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பூரண ஹர்த்தாலும் ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றதல்லவா? அந்த ஆர்ப்பாட்டத்தைப் பார்த்த தமிழ் அரசியல் தரப்புகள் புலிகள் மீண்டும் வந்து விட்டனரோ! என்று பயந்து போயினர். இளைஞர்களின் இத்தகைய எழுச்சிக்கு இடம் வைக்கக் கூடாது என இவர்கள் திட்டம் தீட்டினர்ஸ
எதுவாயினும் அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 130 இளைஞர்களில் குற்றம் அற்றவர்கள் விடுதலை பெறவேண்டும்.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ளலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டனை பெற்று விடக் கூடாது என்பதே நீதி அறம்.

அநுராதபுரம் சிறையில் உள்ள 130 பிள்ளைகளின் பெற்றோர் யாழ்ப்பாணத்தில் இருந்து அநுராதபுரத்திற்கு அலைகின்ற பரிதாபம் நீக்கப்பட வேண்டும். இதற்கு வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் உதவி செய்ய வேண்டும்.

கைதான இளைஞர்களுக்காக தாம் வாதிட முடியும் என வவுனியா சட்டத்தரணிகள் ஏற்கெனவே கூறியிருந்தனர். இது கைது என்ற துன்பத்திலும் ஓர் ஆறுதலை சம்பந்தப்பட்ட பெற்றோர்களுக்குக் கொடுத்துள்ளது.

இதை வவுனியா சட்டத்தரணிகளுக்கு நாமும் ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.






Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies