.தீபன் திரைப்படத்திற்கு இலங்கை பாராட்டு தெரிவித்துள்ளது
26 May,2015
.
.
இலங்கைத்தமிழர்கள் பற்றிய பிரெஞ்சுப்படமான ‘தீபன்’ கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வென்றதற்கு இலங்கை அரசாங்கம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.
ஆட்சிமாற்றத்தின் பின்னர், தமிழர்களிற்கு உரிய அரிசியல் அங்கீகாரத்தை வழங்குவதற்கு புதிய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில், இந்த விடயத்தில் சர்வதேச கவனத்தை ஈர்க்க இந்த விருது உதவிகரமாக அமையுமென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
‘இலங்கை நிலவரம் பற்றி இந்த படம் பேசுகிறது. எனினும், இது தற்போதைய நிலவரமல்ல. தற்போது நிலைமை மிக வேறுபட்டதாக உள்ளது.
இப்போதுள்ள புதிய அரசு நல்லிணக்க செயற்பாடுகளில் தீவிர கவனம் செலுத்துகிறது” என்றார்.