விரைவில் ஆட்சியை மாற்றுவோம்! அம்பாறையில் சூளுரைத்தார் மஹிந்த
இந்த ஆட்சி வேண்டாம். நாம் விரைவில் ஆட்சியை மாற்றுவோம் என்று சூளுரைத்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. நேற்று அம்பாறையில், மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் நிம்மதியாக வாழ்கின்ற சூழலை நானே உருவாக்கினேன். நூறிற்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகளை விடுதலைப் புலிகள் கொன்றனர். காத்தான்குடி பள்ளி வாசலில் தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம் மக்கள் சுடப்பட்டனர்.

கிழக்கு மாகாணத்தில் இருந்து ஹஜ்ஜிக்கு சென்றவர்களும் சுடப்பட்டனர். பொலிஸாரும் கொல்லப்பட்டனர். இந்த செயல்களை எல்லாம் இல்லாமல் செய்து நாட்டில் யுத்தம் நிறுத்தப்பட்டு மக்கள் நிம்மதியாகவும், சுபீட்சமாகவும் வாழ்கின்ற சூழ்நிலையை நானே உருவாக்கினேன். ஜனாதிபதியை மாற்ற வேண்டும் என மக்கள் வாக்களித்தனர் என்கின்றனர். ஆனால் இன்று மாறாக மாகாணசபையில் ஆட்சி மாற்றப்பட்டுள்ளது. பிரதேச சபை கலைக்கப்பட்டுள்ளது.
மக்களுக்குப் பணி செய்த சமுர்த்தி அதிகார சபையின் உயரதிகாரிகள், பாதுகாப்பு செயலாளர்கள் பழிவாங்கப்படுகின்றனர். அமைச்சர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். முக்கிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இந்த ஆட்சி வேண்டுமா? வேண்டாம். விரைவில் நாம் இந்த ஆட்சியை மாற்றி மக்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்கின்ற சூழ்நிலை உருவாக்குவோம். மிக விரைவில் ஆட்சியை மாற்றுவோம்- என்றார். என தெரிவித்தார்.
யாழ்ப்பாண வன்முறைகள்- எச்சரிக்கிறார் மகிந்த!
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பொலிஸார் உடனடியான கவனத்தை செலுத்த வேண்டும். இவ்வாறான சம்பவங்களின் அடிப்படையிலேயே பயங்கரவாதம் உருவாக முடியும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நீதிமன்றத்துக்கும் பொலிஸ் நிலையத்துக்கும் கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது.விடுதலைப் புலிகளின் ஆரம்பமும் இவ்வாறே அமைந்திருந்தது.

எனவே பொலிஸார் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் நன்கு திட்டமிடப்பட்டவையாகும்.எனவே சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்பட்டு தற்போதைய நிலை கட்டுக்குள் கொண்டு வரப்படவேண்டும் என்று மஹியங்கனையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் மஹிந்த குறிப்பிட்டார்.
ஒரே மேடையில் மைத்திரி, மஹிந்த, சந்திரிக்காவை ஏற்றி இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, சந்திரிக்கா பண்டாரநாயக்க
ஆகியோரை ஓரே மேடையில் ஏற்றி இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களைத் தவிர்ந்த ஏனைய அனைவரும் புண்ணியத்திற்காக அமைச்சுப் பதவி பெற்றுக்கொண்டவர்கள்.
அரசியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தவும், புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கவுமே நாம் அரசாங்கத்தில் இணைந்து கொண்டோம்.
மக்களுக்கு தேவையான வகையில் அரசியல் அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டது.
நாம் பதவிகளுக்காக ஆசைப்பட்டு சென்றதாக சிலர் எம்மீது விமர்சனக் கணைகளை தொடுத்தார்கள்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு குறுட்டு அதிஸ்டத்தில் பிரதமர் பதவி கிடைத்துள்ளது.
மக்கள் ஆணையினால் பதவி கிடைக்கவில்லை, பிரதமர் வார்த்தைகளினால் நீதிமன்றின் மீது கல் எறியும் போது வடக்கு மக்கள் நிஜக் கற்களைக் கொண்டு நீதிமன்றை தாக்குகின்றனர்.
மஹிந்த பிரதமராகுவதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.