சிஐடி விசாரணையில் கோத்தபாய பதற்றம்!
21 May,2015
சிஐடி விசாரணையில் கோத்தபாய பதற்றம்! - விமானப்படைத் தளபதியையும் காட்டிக் கொடுத்தார்
கடந்த புதன்கிழமை நிதிமோசடி குறித்த விசேட பொலிஸ்பிரிவின் முன்னிலையில் ஆஜரான வேளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டதாகவும், மிக் விமான கொள்வனவில் முறை கேடுகள் ஏதாவது இடம்பெற்றிருந்தால் அதற்கு தான் பொறுப்பல்ல என்றும், அதற்கு முன்னாள் விமானப்படை தளபதியே காரணம் என்றும் தெரிவித்திருக்கின்றார்.
கடந்த புதன்கிழமை நிதிமோசடி குறித்த விசேட பொலிஸ்பிரிவின் முன்னிலையில் ஆஜரான வேளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டதாகவும், மிக் விமான கொள்வனவில் முறை கேடுகள் ஏதாவது இடம்பெற்றிருந்தால் அதற்கு தான் பொறுப்பல்ல என்றும், அதற்கு முன்னாள் விமானப்படை தளபதியே காரணம் என்றும் தெரிவித்திருக்கின்றார்.
புதன்கிழமை ஆறு மணி நேரம் இடம்பெற்ற இந்த விசாரணைகளின் பொது கோத்தபாயவிடம் முதலில் மிக் விமானக் கொள்வனவு குறித்த கேள்விகளே எழுப்பப்பட்டன. இதற்கு சற்று தடுமாற்றத்தோடும், பதட்டத்தோடும் அவரின் கைநடுங்கவும் பதிலளித்திருக்கின்றார். இதன் போது கோத்தபாய ராஜபக்ச உரிய முறையிலேயே விமான கொள்வனவு இடம்பெற்றதாக குறிப்பிட்டார்.
ஆனால் அவரின் பதிலில் திருப்தியடையாத நிதிமோசடி தொடர்பான பொலிஸார் துருவிதுருவி விசாரிக்கத் தொடங்கியதும் கோத்தபாய முன்னாள் விமானப்படை தளபதி எயர் மார்சல் ரொசான் குணதிலக மீது சட்டென்று பழியை போட்டார். விமான கொள்வனவில் நிதிமோசடிகள் ஏதேனும் இடம்பெற்றிருக்குமாயின் அதற்கு முன்னாள் விமானப்படைத் தளபதியே காரணம் என தெரிவித்த கோத்தபாயராஜபக்ச, இதற்காக என்னிடம் குற்றம் சுமத்த முடியாது என்றும் சமாளித்திருக்கின்றார்.
இந்த மிக் விமானங்களை பயன்படுத்தியதாலேயே தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தை வெற்றி கொள்ள முடிந்தது என்பதை மக்கள் உணரவேண்டும், இது குறித்து எவ்வித விசாரணைகளும் இடம்பெறக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
லங்கா மருத்துவமனையில் (இலங்கை அப்பலோ) அவரிற்குள்ள பங்குகள் குறித்தும் அவரிடம் விசாரணை இடம்பெற்றது. குறிப்பிட்ட மருத்துவமனையின் பங்குகளை கோத்தபாயவின் நெருங்கிய நண்பரான டிலித் ஜெயவீர தனக்கு சாதகமான விதத்தில் அதிகரித்து காட்டினார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.அதன் பின்னர் அதன் பங்குகளை அவர்கள் இந்திய நிறுவனமொன்றிற்கு விற்பனை செய்துள்ளனர்.
விசாரணைகளை முடித்து வெளியில் வரும் பொழுது அவரின் முகத்தில் வேர்வைகள் காணப்பட்டதாகவும், தன்னுடைய மெய்ப்பாதுகாவலர்களை அழைத்து வாகனத்தை உள்ளே கொண்டு வருமாறு அழைத்துள்ளார்.