பிரபாகரணுக்கு அஞ்சலி நோட்டீஸ் மகிந்த ராஜபக்ஷவின் ஆடகள் !
20 May,2015
மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் உள்ளவேளை , மே 18 ஐ அவர்கள் போர் வெற்றிதினமாக கொண்டாடிவந்தார்கள். ஆனால் தற்போது பொறுப்பேற்றுள்ள மைத்திரி மே 18 ஐ போர்வெற்றி தினமாக கொண்டாடவில்லை. இதனை அடுத்து ஆத்திரமடைந்த மகிந்தவின் கைக்கூலிகள் , பிரபாகரனுக்கு அஞ்சலி நோட்டில் அடித்து அதனை சில இடங்களில் ஒட்டியுள்ளார்கள். அதுபோக அதனை பேஸ்புக்கில் போட்டு சிங்கள இனவாதிகள் கொண்டாடியுள்ளார்கள். சிங்கள பேஸ்புக் பக்கம் ஒன்றில் போட்ட ,அஞ்சலி நோட்டீஸ் ஒன்றுக்கு மட்டும் சுமார் 18,000 லைக் விழுந்துள்ளது.
அதனை 10,000 பேர் ஷியார் செய்தும் உள்ளார்கள். சிங்கள இனவாதிகள் தற்போதுகூட இதுபோன்ற ஈனச் செயல்களில் ஈடுபட்டுவருகிறார்கள். சிங்கள மக்களில் ஒரு பகுதியினரே சமாதானத்தை விரும்புகிறார்கள். ஆனால் பெரும்பாண்மையான மக்கள் தமிழர்களை அவ்வாறு ஒரு சமாதான நோக்கில் பார்க்கவில்லை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.