98 பாராளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்தவிற்கு ஆதரவா?பதுக்கப்பட்டுள்ள சொத்துக்கள் குறித்த விசாரணைகள் ஆரம்பம்:-
17 May,2015
அமெரிக்காவில் பதுக்கப்பட்டுள்ள சொத்துக்கள் குறித்த விசாரணைகள் ஆரம்பம்:-
அமெரிக்காவில் பதுக்கப்பட்டுள்ள சொத்துக்கள் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் மோசடியான முறையில் திரட்டப்பட்ட பாரியளவிலான சொத்துக்கள் அமெரிக்காவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்ட பாரியளவிலான சொத்துக்களை மீட்பதற்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பிலான விசாரணைகளை நடாத்த அமெரிக்க அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த முக்கியஸ்தர்கள் பெருமளவு சொத்துக்களை இவ்வாறு கொள்ளையிட்டு அமெரிக்க வங்கிகளில் வைப்புச் செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அமெரிக்க எப்.பி.ஐ. புலனாய்வு பிரிவு, நிதித்திணைக்களம், அமெரிக்க குடிவரவு திணைக்களம், அமெரிக்க சுங்கத் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்து, இலங்கை அதிகாரிகளின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
திணைக்கள மட்டத்தில் தகவல்களை பரிமாறிக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 98 பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவளித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தரப்பிற்கு ஆதரவளிக்க இந்த 98 பாராளுமன்ற உறுப்பினர்களும் இணங்கியுள்ளனர்.
முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரட்ன பொதுச் செயலாளராக பதவி வகிக்கும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் கதிரை சின்னத்தில் மஹிந்த போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியிலோ இணைந்து போட்டியிடாது புதிய கூட்டணி ஒன்றை அமைத்து அதன் ஊடாக தேர்தலில் போட்டியிட சில ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை அணி திரட்டி புதிய கூட்டணி ஒன்றை அமைத்து அதன் ஊடாக பொதுத் தேர்தலில் வேட்பாளர்களை களமிறக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.