முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு மீதான நீதிமன்றத் தீர்ப்பினால் எங்குசெல்வதென தெரியாதுள்ளேன். இந்த வழக்கு தொடர்பில் எம்மிடம் பதில் இருந்தும் அதனை கூறுவதற்கு நீதிமன்றம் சந்தர்ப்பம் வழங்கவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அரசியல் பழவாங்கல் இடம்பெற்றுள்ளதா அல்லது நீதித்துறை பலப்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கான பதிலை அறிந்து கொள்வதற்கு ஆர்வமாக உள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற வெகுசன ஊடகங்கள் சீர்திருத்தம் தொடர்பிலான தேசிய மாநாட்டின் இறுதி நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் எதிர்க்கட்சித்தலைவர் நிமல் சிறி பால டி சில்வா, இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவர் குமார் நடேசன், சர்வதேச ஊடக ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர் ரங்க கலன்சூரிய, ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், மாகாண சபை உறுப்பினர்கள், சர்வதேச ஊடக அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள், தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சு, ஊடக சீர்திருத்தத்திற்கான தேசிய உச்சிமாநாட்டு செயலகம், இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், மற்றும் சாட் அமைப்பின் பிரதிநிதிகள், ஊடக கற்கை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்
இங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கையில்- 'நாட்டின் ஊடகச் சுதந்திரம் பலப்படுத்தப்பட வேண்டும். ஊடகங்களின் மூலமாகவே நாட்டு மக்கள் தகவல்களை பெற்றுக்கொள்கின்றனர். இந்நிலையில் ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். நாட்டில் நல்லாட்சி நிலவுவதற்கு அமைவாக ஊடக சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க முடியும். இந்நிலையில் ஊடகத்துறையை சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் புரண ஆதரவினை வழங்க தயாராகவுள்ளது.
தற்போது ஊடங்களினூடாக முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன. நேற்றுக்காலை மிக முக்கியமான செய்தியொன்றை பத்திரிகைகளை பார்த்தே அறிந்து கொண்டேன். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்வதற்கு தடை உத்தரவினை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பிலான வழக்கிற்கு நீதிமன்றத்தினால் எனக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை. ஆகவே உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முழுமையான விபரத்தை நான் இன்று(நேற்று) காலை ஊடகங்களினூடாகவே அறிந்து கொண்டேன். இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கோ பிரதமராகிய எனக்கோ எதுவுமே தெரியாது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு அடிப்படை உரிமை மீறல் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்ய முடியும். அது ஜனநாயக உரிமையும் கூட. அந்த விடயத்தை என்னால் ஒரு போதும் கேள்விக்குட்படுத்த முடியாது. ஆனால் அரசியல் பழிவாங்கலை மையப்படுத்தி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அத்தீர்ப்புக்காக நீதிமன்றத்தினால் கேள்விக்குட்படுத்தும் அம்சங்கள் தொடர்பில் பதிலளிக்கும் பொறுப்பு அரசாங்கத்திடம் உள்ளது. எனினும் இது தொடர்பில் தௌிவுபடுத்துவதற்கு உயர்நீதிமன்றம் எமக்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை. சந்தர்ப்பம் வழங்கியிருந்தால் அரசாங்கத்தின் தரப்பின் வாதத்தினை எம்மால் முன்வைத்திருக்க முடியும்.
அரசியல் பழிவாங்கல் செய்யப்படுவதாக கூறும் குற்றச்சாட்டு எந்தவொரு அடிப்படையுமற்றது. எவ்வாறாயினும் இந்த வழக்கு ஒக்டோபர் மாதம் வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அது வரைக்கும் எம்மால் பொறுத்திருக்க முடியாது. குறித்த தீர்ப்பின் தோற்றத்தன்மை எவ்வாறானது என்பதனை அறியவேண்டியுள்ளது. உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அரசியல் பழிவாங்கல் இடம்பெற்றுள்ளதா அல்லது நீதித்துறை பலப்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கான பதிலை அறிந்து கொள்வதற்கு நான் ஆர்வமாக உள்ளேன்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் தலைவர் மாத்திரமின்றி பொதுநலவாய அமைப்பின் தலைவராகவும் செயற்படுகிறார். ஆகையால் இவரது பெருமையை நாங்கள் பாதுகாக்க வேண்டியுள்ளது. பொதுநலவாய அமைப்பின் கொள்கையை பாதுகாக்கும் வகையில் எங்களுடைய செயற்பாடுகள் காணப்பட வேண்டும்.
இதன்பிரகாரம் குறித்த தீர்ப்பு தொடர்பில் பொதுநலவாய அமைப்பின் நீதிமன்றத்தினூடாகவும் அதன் சட்ட அறிஞர்களின் மூலமாகவும் ஆலோசனையை பெற்று குறித்த வழக்கின் அடுத்த கட்ட நகர்வினை முன் நகர்த்தவுள்ளேன். இதனூடாக சர்வதேசத்தினை நாடவில்லை. மாறாக ஆலோசனை மாத்திரமே பெறவுள்ளேன்.
மேலும் செப்டம்பர் மாதம் புதிய பாராளுமன்றம் உருவாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஒக்டோபர் மாதத்தின் பின்னர் குறித்த வழக்கிற்கு புதிதாக அமையும் அரசாங்கம் பதிலளிக்க முடியாது. அதேநேரம் அக்காலத்தில் 2015ஆண்டிலிருந்து அரசாங்கம் எவ்வாறு பதிலளிக்க முடியும் போன்ற நடைமுறைப்பிரச்சினைகளும் காணப்படுகின்றன' என்றார்.
ஜனாதிபதியாக இருந்தபோது மகிந்தவை புகழ்ந்த அமைச்சர்கள்!
சேர், சேர் என்று கூறியே மஹிந்த ராஜபக் ஷவை கடந்த அரசாங்கத்தில் இருந்த முக்கியஸ்தர்கள் கவிழ்த்துவிட்டனர். ஆனால் நான் பல இடங்களில் மஹிந்த ராஜபக் ஷவை எதிர்த்து குரல் கொடுத்துள்ளேன் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த அரசாங்கத்தில் மஹிந்த ராஜபக் ஷவின் புகழ்பாடியே பலர் செயற்பட்டனர். அவரும் அந்த புகழ்ச்சிக்கு மயங்கி இருந்தார். சூரியன் உதித்ததும் உங்களால்தான் சேர், சூரியன் மறைவதும் உங்களால்தான் சேர் , அனைத்தும் உங்களினால்தான் நடக்குது சேர் என்று மஹிந்தவை சுற்றி இருந்தவர் கள் கூறிவந்தனர். ஒருவர் அவருக்காக பாடி னார். ஒருவர் கவிதை எழுதினார்.
மஹிந்தவை மன்னர் என்றும் கூறினர். மஹிந்த கடந்த தேர்தலில் வெற்றிபெற்றிருந்தால் கிரீடம் ஒன்றையும் அணிவித்திருப்பர். இவ்வாறு சேர், சேர் என்று கூறியே மஹிந்த ராஜபக் ஷவை கடந்த அரசாங்கத் தில் இருந்த முக்கியஸ்தர்கள் கவிழ்த்துவிட்டனர். ஆனால் நான் பல இடங்களில் மஹிந்த ராஜபக் ஷவை எதிர்த்து குரல் கொடுத்துள்ளேன்.
தேசிய பிரச்சினை விடயத்தில் மஹிந்த ராஜபக் ஷவின் கொள்கையை நான் விமர் சித்தேன். இன்று மஹிந்தவுக்காக குரல் கொடுப்பவர்கள் அன்று விமர்சிக்க வில்லை. மாறாக புகழ்பாடினர். ஆனால் இறுதியில் என்ன நடந்தது?
சேர், சேர் என்று மஹிந்த ராஜபக்சவை உச்சிகுளிர கூப்பிட்ட கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் அவரை தலைகுப்புற கவிழ்த்துவிட்டனர். ஆனால் நான் பல இடங்களில் மஹிந்த ராஜபக்சவை எதிர்த்து குரல் கொடுத்துள்ளேன் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
கடந்த அரசாங்கத்தில் மஹிந்த ராஜபக்சவின் புகழ்பாடியே பலர் செயற்பட்டனர். அவரும் அந்த புகழ்ச்சிக்கு மயங்கி இருந்தார். சூரியன் உதித்ததும் உங்களால்தான் சேர், சூரியன் மறைவதும் உங்களால்தான் சேர் , அனைத்தும் உங்களினால்தான் நடக்குது சேர் என்று மஹிந்தவை சுற்றி இருந்தவர்கள் கூறிவந்தனர். ஒருவர் அவருக்காக பாடினார். ஒருவர் கவிதை எழுதினார்.
மஹிந்தவை மன்னர் என்றும் கூறினர். மஹிந்த கடந்த தேர்தலில் வெற்றிபெற்றிருந்தால் கிரீடம் ஒன்றையும் அணிவித்திருப்பர். இவ்வாறு சேர், சேர் என்று கூறியே மஹிந்த ராஜபக்சவை கடந்த அரசாங்கத்தில் இருந்த முக்கியஸ்தர்கள் கவிழ்த்துவிட்டனர். ஆனால் நான் பல இடங்களில் மஹிந்த ராஜபக்சவை எதிர்த்து குரல் கொடுத்துள்ளேன்.
தேசிய பிரச்சினை விடயத்தில் மஹிந்த ராஜபக்சவின் கொள்கையை நான் விமர்சித்தேன். இன்று மஹிந்தவுக்காக குரல் கொடுப்பவர்கள் அன்று விமர்சிக்க வில்லை. மாறாக புகழ்பாடினர். ஆனால் இறுதியில் என்ன நடந்தது? என்றார்.