மகிந்தவின் காலத்தில் கண்ணீர் வடித்த மைத்திரி
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கீழ் சுகாதார அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் தனக்கு எதிராக அழுத்தம் பிரயோகிக்கப்பட்டமை தொடர்பில் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிபடுத்தியுள்ளார்.
அலரி மாளிகையில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நான் சுகாதார அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் ஏதேனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது எனக்கு அலரி மாளிகையில் இருந்து தொலைபேசி அழைப்பு வரும் அதன் போது என்னிடம் கேட்பார்கள் ரத்தின பிரிய இன்று வந்தார்களா என்று ஆம் என்று நான் கூறுவேன்.
ஏன் அவரை இன்று வருவதற்கு சம்மதம் தெரிவித்தீர்கள் அவர் தொழிற்சங்க தலைவர் என்பதனாலே அவரது வருகைக்கு சம்மதம் தெரிவித்தேன் அனைத்து தொழிற்சங்க தலைவர்களையும் சம்மதிக்க நான் அனுமதிக்க வேண்டும் என்று கூறுவேன்.
அதன் போது அவர் அரசாங்கத்திற்கு எதிரானவர் என்று உங்களுக்கு தெரியாதா என்று கேட்பார்கள் தெரியும் என்று பதிலளித்தால்,
தெரியும் என்றால் எதற்கு சந்திப்பதற்கு சம்மதம் தெரிவித்தீர்கள் என்று கேட்டால் வழங்க வேண்டியது அவசியம் என்று கூறுவேன்.
கடந்த 05 வருடங்களும் என்னை இவ்வாறே கட்டுபடுத்தி வைத்திருந்தார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆதங்கத்தை இன்று வெளிப்படுத்தியிருந்தார்.
சிக்கலில் சிக்கிய மைத்திரி- ரணில்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர்-மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில இந்த முறைப்பாட்டை இன்று (13) செய்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் 2014 நவம்பர் 21ம் திகதி ஊடக சந்திப்பு நடத்தி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தான் ஜனாதிபதியானால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்குவேன் என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
1981 இலக்கம் 15 என்ற ஜனாதிபதி சட்டத்தின் கீழ் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் தனது வெற்றியை உறுதி செய்து கொள்ளவென பதவி வழங்க வாக்குறுதி அளிப்பது, மற்றும் பதவிகள் பெற்றுக் கொள்வது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு என உதய கம்மன்பில தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் விசாரணை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், 100 நாள் திட்டம் நிறைவு பெற்றுள்ள நிலையில் இனி கடந்த கால ஊழல்கள் குறித்து வாராந்தம் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவித்தார்.
கோத்தபாயவை கைது செய்ய இடைக்காலத் தடை
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் கோட்டாவை ஆஜராகுமாறு தெரிவித்திருந்த நிலையில், அது தன்னை கைது செய்வதற்கான சூழ்ச்சி என்றும், இதனால் தனது அடிப்படை உரிமை மீறப்படுவதாகவும் தெரிவித்து அவர் மனு தாக்கல் செய்தார்.
குறித்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகளான ஈவா வனசுந்தர, சரத் ஆப்ரூ ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன்போது, இம் மனுமீதான விசாரணை நிறைவுபெற்று தீர்ப்பு வெளியாகும் வரை அவரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் கோட்டாவை ஆஜராகுமாறு தெரிவித்திருந்த நிலையில், அது தன்னை கைது செய்வதற்கான சூழ்ச்சி என்றும், இதனால் தனது அடிப்படை உரிமை மீறப்படுவதாகவும் தெரிவித்து அவர் மனு தாக்கல் செய்தார்.
குறித்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகளான ஈவா வனசுந்தர, சரத் ஆப்ரூ ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன்போது, இம் மனுமீதான விசாரணை நிறைவுபெற்று தீர்ப்பு வெளியாகும் வரை அவரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
கோத்தபாயவின் மனுவிசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிக்கும் நீதிபதிகள் குழுவில் இருந்து ஒருவர் விலகியுள்ளதாக நீதிமன்றத்திலிருந்து தீபம் செய்தியாளர் அறிவித்துள்ளார்.
பொலிஸ் நிதி மோசடி பிரிவின் செயற்பாடுகளை சவாலுக்கு உட்படுத்தியும் தன்னை கைது செய்யும் திட்டத்திற்கு தடை விதிக்குமாறு கோரியும் கோத்தபாய ராஜபக்ச உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது விசாரணை குழுவின் நீதிபதி புவனெகா அலுவிகாரே விசாரணையில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிச் சென்றதாக எமது நீதிமன்ற செய்தியாளர் அறிவித்துள்ளார்.
எனினும் ஏனைய இரண்டு நீதியரசர்களான ஈவா வனசுந்தர, சிசிர டி ஆப்ரா ஆகியோர் முன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.