தூக்கில் தொங்கும் இளைஞன் யார்?-
வடமராட்சியின் நெல்லியடி நகரத்தில் உள்ள முக்கிய தேவாலயமொன்றிற்குள் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். சுமார் 18 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவரே தூக்கிட்டுள்ளார். பாதிரியாரின் அறைக்கு அருகில் தூக்கில் தொங்கியபடி உள்ளார். தூக்கில் தொங்கும் இளைஞன் யார்? காரணம் போன்ற விடயங்கள் இதுவரை வெளியாகவில்லை. சம்பவ இடத்திற்கு நெல்லியடி பொலிசார் சென்றுள்ளனர்.
கசிப்புடன் யுவதி கைது:
வடமராட்சியின் துன்னாலைப் பகுதியில் 27 வயதான யுவதியொருவரை கசிப்புடன் கைது செய்துள்ளதாக நெல்லியடி பொலிசார் அறிவித்துள்ளனர். இந்த யுவதியின் வீட்டில் 4,500மில்லிலீற்றர் கசிப்பையும் கைப்பற்றியுள்ளனர்.
இவரது வீட்டில் வைத்தே கசிப்பு விற்பனை நடந்துள்ளதாக தெரிகிறது. தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அந்த வீட்டை சோதனையிட்டதாக பொலிசார் கூறுகின்றனர். கசிப்புடன் கைதான யுவதியை இன்று நீதிமன்றத்தில் நிறுத்தவுள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.
வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை
திருமணவீட்டிற்கு சென்றவர்களின் வீட்டை உடைத்தி திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். தொலைக்காட்சிப்பெட்டி, நீர்இறைக்கும் இயந்திரங்கள், 12 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றை திருடர்கள் சுருட்டிக் கொண்டு சென்றுள்ளனர்.
துன்னாலையின் தக்குச்சம்பாடி பகுதியில் கடந்த திங்கட்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.
திருமணவைபவத்தை முடித்துக் கொண்டு திரும்பியவர்கள், வீடு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் நெல்லியடி பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர்

4 கிலோமீற்றர் நடந்து பாடசாலை செல்லும் மாணவர்கள்
கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் உள்ள கோரக்கன்கட்டு கிராமத்தில் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் மக்கள் பெரும் அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர். சுமார் 200இற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கல்வியை தொடர பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இவர்கள் தினமும் 4 கிலோமீற்றரிற்கும் அதிக தூரத்தை நடந்து கடந்தே வருகிறார்கள்.
இந்த கிராமத்தில் 300இற்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள 200 வரையான மாணவர்களும் முரசுமோட்டையின் றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், முருகானந்தா கல்லூரிக்கே செல்ல வேண்டும். இவை நான்கு கிலோமீற்றர்களிற்கும் அதிகமான தூரத்தில் உள்ளன.இந்த கிராமத்தின் போக்குவரத்து பிரச்சனையில் அதிகாரிகள் கவனம் செலுத்துவார்களா?
பிறப்பு உறுப்பில் சூடு வைத்த தந்தை
மகளின் பிறப்பு உறுப்பில் சூடு வைத்து சித்திரவதை செய்த தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்தவர் ரோபின் வயது 42 என்ற தந்தையே இவ்வாறு சூடு வைத்துள்ளார்.
இவர், இறந்துவிட்ட தனது முதல் மனைவிக்கு பிறந்த 6 குழந்தைகள் மற்றும் 2வது மனைவியுடன் 10 ஆண்டுகளுக்கு முன்பு அகதியாக சென்று ராமேஸ்வரம் மண்டபம் முகாமில் தங்கி உள்ளார்.
குடிப்பழக்கம் உள்ள ரோபின், போதையில் தனது 10 வயது மகளை தினமும் அடித்து சித்ரவதை செய்துள்ளார்.
சிறுமியின் தொடை, பிறப்பு உறுப்பில் சூடு போட்டுள்ளார். படுகாயமடைந்த சிறுமி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதற்கிடையில், போதையில் ரோபின் மண்டபம் முகாமில் உள்ளவர்களிடம் தகராறு செய்துள்ளார். ஆத்திரமடைந்த அகதிகள் ரோபினையும், அவரது 2 வது மனைவியையும் கைது செய்யக்கோரி, மண்டபம் முகாமிற்குள் கோஷமிட்டனர். ராமேஸ்வரம் மகளிர் பொலிஸார் ரோபினை கைது செய்து விசாரிக்கின்றனர்.