ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகிய இருவருக்குமிடையிலான பேச்சு ரணிலை விரட்டியடிக்கும் ஒரு முயற்சி என்றும், இந்த சந்திப்பின் நோக்கம் இதுவென்றால் இதற்கு நாம் ஒருபோதும் உடன்பட முடியாதென்றும் தேசிய நிறைவேற்று சபை உறுப்பினரும் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மனோ கணேசன் இதனைதெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது- 'மகிந்தவின் காலம் முடிந்து விட்டது. அவர் இனி ஓய்வு பெற்று வீடு போக வேண்டும். மகிந்த இல்லாத ஸ்ரீ.ல.சு.க.வுடன் இணைந்து செயல்பட நாம் தயார். ஆனால், மகிந்த ராஜபக்ச உள்வாங்கப்படும் எந்த ஒரு ஏற்பாட்டுக்கும் இந்நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்கள் உடன்பட மாட்டார்கள்.
எனவே இந்த பேச்சுவார்த்தையின் நோக்கம் ஒருமுறை பிரதமராகவும் இரு முறை ஜனாதிபதியாகவும் பதவி வகித்த மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பும் பேச்சுவார்த்தையாகவே இருக்க வேண்டும் .
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தங்களது கட்சி தலைவர் என்று உரிமை கொண்டாடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசியல்வாதிகளுக்கு ஒன்றை கூறி வைக்க விரும்புகிறேன்.
அவரை உங்கள் கட்சி தலைவராக நீங்கள் ஆக்க முன்இ நாங்கள் அவரை இந்த நாட்டின் ஜனாதிபதியாக ஆக்கிவிட்டோம். நாம் அவரை ஜனாதிபதியாக ஆக்கிய பின்னரே நீங்கள் வேறு வழியில்லாமல் அவரை உங்கள் கட்சித் தலைவர் ஆக்கியுள்ளீர்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.
நாங்கள் பல்லாண்டுகளாக போராடி மகிந்தவை ஆட்சி கட்டிலில் இருந்து அகற்றினோம். அவரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் குறுக்கு வழியில் உள்ளே கொண்டு வர நாம் இடந்தர முடியாது. நாங்கள் இந்த அரசாங்கத்தில் இடை நடுவில் வந்து குடி புகுந்தவர்கள் அல்ல. துப்பாக்கி குண்டுகளுக்கு மத்தியில், வெள்ளை வேன்களுக்கு மத்தியில்இ கல்லடிகளுக்கு மத்தியில், சொல்லடிகளுக்கு மத்தியில், பதவி வரப்பிரசாதங்களை நிராகரித்துவிட்டு பல்லாண்டுகளாக போராடி வெற்றி கண்டவன் நான்.
பதவிகளுக்காக சோரம்போனவன் நான் அல்ல. எனவே இதை சொல்வதற்கு எங்களுக்கு முழுமையான உரிமை இருக்கிறது.
இந்த நாட்டிலே வாழும் தமிழ்இ முஸ்லிம் மக்களுக்கு மகிந்த ராஜபக்ச இழைத்த சொல்லொணா கொடுமைகளை நாம் மறக்கவில்லை.
மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்க நாம் கடுமையாக உழைத்தோம். இது ஜனாதிபதிக்கு தெரியும். எனவே மைத்திரி-மகிந்த பேச்சுவார்த்தையை வெறுமனே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற கட்சி மட்ட பேச்சுவார்த்தை என நாம் கருதிவிட முடியாது.
இது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்விவகாரம் என்றும் நாம் சும்மா இருக்க முடியாது. வாக்களித்த எங்கள் மக்களுக்கு நாம் பதில் சொல்ல கடமைபட்டுள்ளோம். இதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புரிந்து கொண்டுள்ளார் என நாம் நம்புகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
மைத்திரி - மஹிந்த சந்திப்பு வெற்றியளித்துள்ளது - துமிந்த திசாநாயக
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையிலான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக அமைச்சர் துமிந்த திசாநாயக தெரிவித்துள்ளார்.
முன்னாள், இந்நாள் ஜனாதிபதிககுக்கிடையில் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
இன்றைய சந்திப்பானது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருக்கும், கட்சியின் ஆலோசகருக்கும் இடையேயான ஒரு சந்திப்பாகவே அமைந்தது. இதனை ஒரு கட்சி சார்பான கூட்டமாகவே நாம் நோக்குகின்றோம். அந்தவகையில் இந்த கூட்டம் வெற்றியளித்துள்ளது.
இதன்போது, கட்சியின் எதிர்க்கால செயற்பாடுகள் மற்றும் கட்சியின் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
அதன்போது கட்சியின் பிரதமர் வேட்பாளர் நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதா என ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,
இன்றைய கூட்டம் கட்சிக் கூட்டமாகவே அமைந்தது. இந்த விடயங்கள் தொடர்பில் நிறைவேற்றுச் சபையில் தீர்மானிக்கப்படும் எனவும் மேலும் தெரிவித்தார்.

மகிந்தவின் உள்ளாடையையும் கழற்ற முயற்சித்த அசாத்சாலி
மைத்திரி இல்லாமல் ரணில் இல்லை. ரணில் இல்லாமால் மைத்திரி இல்லை. மகிந்த கௌரவமான முறையில் ஜனாதிபதித் தேர்தலில் தோற்றால் அமைதியாக வீட்டில் இருக்க வேண்டும் என இன்று நடைபெற்ற அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாட்டில் மத்திய மாகாண சபை உறுப்பிணா அசாத் சாலி தெரிவித்தார்.
தமது சகோதராகளையும், சக ஆட்களையும் பாதுகாக்க மீள அரசியலில் புக நாம் இடமளியோம். இந்த நாட்டில் உள்ள சிறுகட்சிகள் ஜ.தே.கட்சி மற்றும் சிறுபான்மைச் சமுகங்கள் இணைந்து மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதியாக்கினோம்.
இன்று சந்திக்க வரும் மகிந்தவை அவரது உள்ளாடையைக் கூட பரிசோதனை செய்தே மைத்திரியை சந்திக்க விட வேண்டும்.
அவர்களது மகன் நாமல் ராஜபக்சவின் பாதுகாவலர் துப்பாக்கியுடன் மைத்திரி இருக்கும் இடத்திற்குச் சென்றிருக்கிறார். ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு பொலிஸ் எம்.எஸ்.ரி இருவா பாதுகாப்புக்கு இருக்க வேண்டும். அவருக்கு துப்பாக்கியுடன் இராணுவப் பாதுகாப்பு அலுவலரை யார் நியமித்தது.
இந்த நாட்டில் மகிந்த செய்த களவுகள், சிறுபான்மையினருக்கு இழைத்த கொடுமைகள் சொல்லொன்னாத் துன்பங்களில் இருந்து நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். இதனை தடுத்து அவரை மீள பிரதமராக்குவதாகவும் ரணிலை வீட்டுக்கு அனுப்புவதாகவும் திலான் பெரேரா தெரிவித்திருந்தர். அதற்கு நாங்கள் விடமாட்டோம்.
20ஆவது திருத்தம் பற்றி இன்று ரணில் விக்கிரமசிங்கவுடன் சிறிய கட்சிகள் பேச்சுவாத்தை நடத்துகின்றோம். அதில் நமது சமுகத்திற்கும் சிறிய கட்சிகளுக்கும் பாதிப்பு இல்லாத தீர்மானத்தை நாம் எதிர்பார்க்கின்றோம்.
தற்போதைய ஜனாதிபதியும் பிரதமரும் சிறுபான்மை பாராளுமன்ற பிரதிநிதித்துவ பாதிப்பாக தீர்மானம் எடுப்பதில்லை எனச் சொல்லியிருக்கின்றா.
மைத்திரிபாலவை வெற்றியின் பின் இணைந்து கொண்டவாகள் தான் தற்போது இந்த அரசை விமர்சனம் செய்கின்றனர் என்றார்.