மகிந்தவை பார்த்து வருந்தும் பொன்சேகா
முன்பு விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் நாட்டை காப்பாற்ற பெரிய தடையாக இருந்தார். அவரை தொடர்ந்து
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இப்பொழுது அவரையும் வீட்டிற்கு அனுப்பியது நாட்டிற்கு மிகவும் ஒரு நல்ல விடயமாகும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம் பெற்ற ஜனநாயக கட்சியின் மே தின பேரணியில் உரையாற்றிய சந்தர்ப்பத்திலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த அவரது கிராமத்தில் ஒரு சாரத்தையும், டீ.சர்ட்டையும் அணிந்துகொண்டு மேசையின் பின்னால் அமரந்திருக்கும் புகைப்படத்தை பத்திரிகைகளில் பார்க்கும் போது நான் மிகவும் பரிதாபப்பட்டேன் என பொன்சேகா கூறியுள்ளார்.
இப்பொழுது நாட்டை சுற்றி வருவதற்கு மகிந்த குடும்பத்திற்கு குதிரைகளோ, ஹெலிகொப்டர்களோ இல்லை, என்று அவர்கள் ஏழை தோற்றத்தை கொடுக்க பார்க்கிறார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜபக்சவிற்கு போதுமான வாகனங்கள் இல்லை எனவும் அவரது விசுவாசிகள் அவருக்கு வாகனங்களை பரிசாக வழங்கியதாகவும் மகிந்த குறிப்பிட்டிருந்தார்.
ஆடம்பர மெர்விடஸ் பென்ஸ் வாங்கனங்கள் அவருக்கு பரிசாக வழங்கப்படுகின்றதா? அந்த கதையினை வேறு யாருக்காவது கூறுவது தான் சரி என பீல்ட் மார்ஷல் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான பொய் கதைகளை நாங்கள் நம்புவதாக இல்லை, கொள்ளையிட்ட பணத்தை மறைத்து வைத்து கொண்டு அந்த பணத்தில் படிப் படியாக ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றார்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நான் எனது ஐந்து வருட அரசியல் வாழ்க்கையில் இரண்டரை வருடங்கள் சிறையிலே கழித்தேன், ராஜபக்சக்கள் அறுவடை செய்தவற்றை இப்பொழுது பரப்புகின்றார்கள், தனக்கு செய்ததற்கு இறுதியில் அவர்களுக்கு என்ன நடக்கும் என்ற நடுக்கத்திலே வாழ்கின்றார்கள் என பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
எனது வகுப்பு மாணவர் தற்போது சிறையில் உள்ளார். குறைந்தது இரண்டு மாதங்களாவது அவர் சிறையில் இருந்தால் அவர் மரணித்து விடுவார், அவர் மட்டும் இல்லை, ராஜபக்ச குடும்பத்தில் ஏனையோரும் இவ்வாறான ஒரு பயத்திலே வாழ்கின்றார்கள்.
எங்கள் இளம் பருவத்தில் பாடசாலைக்கு செல்லும்வழி கூட அவருக்கு தெரியாது. தற்செயலாக ஒரு கால்பந்து கூட அவரது உடலில் பட்டதில்லை என பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இன்று ராஜபக்சக்களை துன்புறுத்துவதாகவும் அவர்கள் நசுக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்துகின்றார்கள், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தவறானவை என கூறுகின்றார்கள்.
மஹிந்த ராஜபக்ச கோயில்களுக்கு சென்று பூஜைகளில் ஈடுபடுகின்றார் இதன் மூலம் அவரது வேதனைகளை மக்களிடம் சொல்ல முற்படுகின்றார்.
அவர் எனக்கு செய்த பாவங்கள் அவருக்கு திரும்பி வரும் என்ற அச்சத்திலே செயற்படுகின்றார்.
மேலும் மஹிந்தவை அவரது கிராமத்தில் அவ்வாறான ஒரு உடையில் பார்ப்பதற்கு நான் வருந்துகிறேன் என பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஐ.நா அறிக்கையில் கோத்தா உள்ளிட்ட 40 பேர் மீது போர்க்குற்றச்சாட்டு?
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை குறித்த அறிக்கையில், 40 பேருக்கு எதிராக
போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, நியமித்த விசாரணைக் குழுவின் அறிக்கையிலேயே, 40 பேர் மீது போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு போர்க்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளவர்களின், முன்னாள் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி, சிறிலங்கா படையினருக்குத் தலைமை தாங்கிய மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் ஆகியோரும் உள்ளடங்கியுள்ளனர் என்றும் கொழும்பு ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
முன்னாள் உயர் மட்டப் பாதுகாப்பு அதிகாரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஐ.நா விசாரணைக் குழுவின் இந்த அறிக்கை வரும் செப்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு எதிரான சாட்சியங்களை அளித்தவர்கள் பற்றிய விபரங்கள், 2031ம் ஆண்டு வரை இரகசியமாக பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது