மகிந்தவைச் சந்திக்க மீண்டும் நேரம் ஒதுக்கினார் மைத்திரி!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்திப்பதற்கான திகதி ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மேதின நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே இதனை தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது இரண்டு பேருக்கும் இடையிலான பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மஹிந்த- மைத்திரி திருமணம் வெற்றியளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் சந்திப்புக்கான திகதி எது என்பதை அவர் வெளியிடவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக்கட்சிக்கு அடிமையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த மேதினம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தின்கீழ் கொண்டாடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காணிகளுக்குள் இராணுவத்தினர் மறைமுகமாகப் பயிற்சி! மக்கள் பெரும் அச்சத்தில்!
யாழ். வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்பு வலயக் காணிகளாக இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகளில் இராணுவத்தினரின் பயிற்சிகள் இடம்பெற்று வருவதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
குறித்த பகுதியில் 3 இராணுவ முகாம்கள் இருப்பதாகவும், 3 வேளைகளிலும் இராணுவத்தினர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கும் பிரதேச மக்கள், இது அச்ச நிலைமையை தோற்றுவித்திருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.
குறித்த பிரதேசமானது மின் இணைப்புகள் அற்றும், பற்றைகளாகவும் காணப்படுகின்றமை இதற்கு ஏதுவாக அமைகிறது என்று வலிகாமம் வடக்கு பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது குறித்து அச்சத்துடன் கருத்து வெளியிடும் பிரதேச மக்கள்,
இராணுவம் தங்களது கிழக்கு – மேற்கான வீதியில் வடபகுதியில் இராணுவத்தினர் முகாமை பலப்படுத்திக் கொண்டுள்ளதுடன் தங்களது பயிற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
இரவு வேளைகளில் காட்டுப் பிரதேசமான இப்பகுதியில் மக்கள் எவ்வாறு நிம்மதியாக வாழ முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
மீள்குடியேறும் எங்களது பயத்தை ஏற்படுத்துகின்றது என்றும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை இது குறித்து ஐ.பி.சி தமிழ் செய்திச் வேவைக்கு கருத்து தெரிவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,
விடுவிக்கப்பட்டுள்ள காணிகளில் இராணுவம் நிலைகொண்டிருந்து பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றமை தொடர்பாக மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் உள்ளிட்ட அரச அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியிருக்கின்றோம்.
எனவே குறித்த பகுதியில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்று அவர் கூறினார்.
மைத்திரியின் இரகசியக் கூட்டத்தில் ஒட்டுக்கேட்க முயன்று வாங்கிக் கட்டிய பொலிஸ் அதிகாரி!
ஜனாதிபதியின் இரகசிய கூட்டமொன்றை யாருக்கும் தெரியாமல் ஒட்டுக்கேட்ட முயற்சித்த ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பிரதான பிரதிப் பொலிஸ்மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடுமையாக வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார். அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் நாடாளுமன்ற அறையொன்றினுள் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதிப் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பாளர் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், எஸ்.எம். விக்ரமசிங்க இந்தக் கூட்டத்தில் பேசப்படும் விடயங்களை ஒட்டுக் கேட்க முயற்சித்துள்ளார்.இதனை அறிந்து கொண்ட ஜனாதிபதி அவரை அழைத்து கடுமையாக திட்டி உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார். கடந்த 26ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் கட்சித் தலைவர்கள் இந்த இரகசிய கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடுகள் தலையிடாத நிலையை உருவாக்குவேன்! - மைத்திரி சபதம்.
இலங்கையின் ஜனநாயகம், சுதந்திரம் பற்றி வெளிநாடுகள் குறைகூறாத அளவுக்கும், அந்த விடயத்தில் சர்வதேச சமூகம் தலையிடாத வகையிலும் இன்னும் ஒரு வருடத்திற்குள் இங்கு பூரண ஜனநாயக்தையும், சுதந்திரத்தையும் ஏற்படுத்தி புதுயுகத்தை உருவாக்குவேன் என்று இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான மே தினக் கூட்டம் ஹைப்பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

புதிய ஆட்சி உருவாக்கப்பட்டு 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில் நாக்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். அதில் மிகப்பிரதானமான 19 ஆவது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் பூரண ஆதரவுடன் நிறைவேற்றியுள்ளோம். தொழிலாளர்களின் உரிமைகளையும், சிறப்பு உரிமைகளையும் பாதுகாப்பதற்காவே எனது அதிகாரங்களைப் பயன்படுத்துவேன். என்னை ஆட்சியில் அமர்த்திய மக்களைத் தவிர வேறு எவராலும் என்னை அசைக்க முடியாது. நாட்டில் உருவாகியுள்ள அமைதியான நிலை தொடர வேண்டும். ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அனைவரும் ஒண்றினைந்து செயற்பட வேண்டும்" - என்றார்.
பெரும்திரளான ஆதரவாளர்கள் பங்கேற்றிருந்த இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமாரதுங்க, ராஜித சேனாரட்ன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதுடன் மஹிந்த ஆதரவு எம்.பிக்கள் சிலர் கலந்து கொள்ளவில்லை. எனினும், மஹிந்தாநந்த அலுத்கமகே, குமாரவெல்கம உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியின் மஹிந்த ஆதரவுக்குழுவினரின் கூட்டம் கிருலப்பனை அத்துலத்முதலி மைதானத்தில் இடம்பெற்றது. இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.