இலங்கை நாடாளுமன்றம் 19வது சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியது
29 Apr,2015
ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் 19வது அரசியல் சட்டத்திருத்த மசோதாவை இலங்கை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. மசோதாவுக்கு ஆதரவாக 215 வாக்குகளும், எதிர்ப்பாக ஒரே ஒரு வாக்கும் பதிவாயின. ஏழு பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. ஒருவர் வாக்கெடுப்பைப் புறக்கணித்தார்.
ஆளும் கட்சியுடன் எதிர்க்கட்சிகளும் இணைந்து மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர சட்டமுலத்திற்கு எதிராக வாக்களித்தார்.
ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமார தான் வாக்களிப்பில் கலந்து கொள்வதில்லை என்று அறிவித்தார்.