தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு பணம் கொடுத்துதான் 2005 ஆம் ஆண்டு தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றதாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழக தொலைக் காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது,
2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாண மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் 2009-ல் நடந்த நிகழ்வுகளை என்னால் தடுத்திருக்க முடியும். மகிந்த ராஜபக்சேவை அதிபராக்கியது யார்? தென்னிலங்கை மக்கள் அல்ல.
3 முதல் 4 லட்சம் தமிழர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது குறித்து ராஜபக்சவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே உடன்படிக்கை ஏற்பட்டிருந்தது.
ராஜபக்ச, விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தார். பணத்தை எடுத்துச் சென்று கொடுத்த எமில்காந்தன் இன்றும் மத்திய கிழக்கு ஆசியாவில் எங்கோ இருக்கிறார். இது தெரிந்த விஷயம்தான்.
இதை ராஜபக்ச கூட மறுத்தது கிடையாது. பிரபாகரன் பணத்தைப் பெற்றுக் கொண்டார். தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வோம் விடுதலைப் புலிகளுக்காக ஆயுதங்களைக் கடத்தியவர்களைத்தான் இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றுள்ளது.
எங்களது கடற்பகுதிக்கு தமிழக மீனவர்கள் ஏன் வரவேண்டும்? எங்கள் கடற்பரப்பை ஆக்கிரமித்தால் எங்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களை சுட்டுக் கொல்ல எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.
கண்டியில் நடைபெறும் மகிந்த ஆதரவுக் கூட்டம்! மஹிந்த பங்கேற்கவில்லை கலந்து கொள்ளச் சென்றவர்கள் மீது கல்வீச்சு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கக் கோரி விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் கண்டியில் இடம்பெற்று வருகின்றது.
இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமான கூட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றவர்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இக்கூட்டத்தில் ஐ.ம.சு கூட்டணியின் மாகாண சபை உறுப்பினர்கள் 87 பேர் கலந்து கொண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம, முன்னாள் ஆளுனர் டிகிரி கொப்பேகடுவ மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மக்கள் பிரதிநிதிகள் பலர் மேடையில் நின்று கொண்டே தான் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டிப் பேரணியிலும் மஹிந்த பங்கேற்கவில்லை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக நிறுத்த வலியுறுத்தும் இரண்டாவது பேரணியிலும் மஹிந்த ராஜபக்ச பங்கேற்கவில்லை.
கண்டியில் இந்தப்பேரணி இன்று இடம்பெற்றது. இதன்போது மஹிந்த ராஜபக்ச அனுப்பி வைத்த செய்தி ஒன்றே வாசிக்கப்பட்டது.
இந்தப் பேரணியை ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பல கட்சிகள் இணைந்து ஒழுங்கு செய்துள்ளன.
மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ உட்பட்ட பலர் இதில் பங்கேற்றனர்