முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 17 பேருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டு!
22 Feb,2015
முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 17 பேருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டு!
கடந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 17 பேருக்கு எதிராக கடுமையான ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
கையூட்டல் பெற்றுக் கொள்ளல், தரகுப் பணம் பெற்றுக் கொள்ளல், சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்தல், நிதி மோசடிகள் உள்ளிட்ட பாரியளவிலான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சிரேஸ்ட அமைச்சர், சில அமைச்சர்கள், சில பிரதி அமைச்சர்கள், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட தரப்பில் உள்ளடங்குகின்றனர்.
இந்த மக்கள் பிரதிநிதிகள் பாரியளவில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமை குறித்த விபரங்கள் சாட்சியங்களுடன் கிடைத்துள்ளதாக ஊழல் மோசடிகளுக்கு எதிரான முன்னணி தெரிவித்துள்ளது.
அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரையில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட சம்பவங்கள் தொடர்பில் 1900 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த முறைப்பாடுகளில் ஒரு பகுதி முறைப்பாடுகள் ஏற்கனவே கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.