சரணடைந்த விடுதலைப்புலிகளை சுட்டுக்கொல்ல கோத்தாவால் அனுப்பப்பட்டவா் புதிய இராணுவத் தளபதி.
20 Feb,2015
இலங்கைக்கு புதிய ராணுவ தளபதியை நியமித்தார் சிறிசேனா
இலங்கையின் புதிய ராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் கிறிஷந்தா டி சில்வாவை நியமித்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா இன்று உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையின் அதிபராக சிறிசேனா பதவியேற்ற நாளில் இருந்து நாட்டின் உயர்பதவிகளை வகிப்பவர்களை அதிரடியாக மாற்றியுள்ளார். இந்நிலையில், இலங்கை ராணுவத்திலும் அதிரடி மாற்றங்களை உருவாக்க எண்ணிய அவர் முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களை படிப்படியாக ஓரம்கட்டி வருகிறார். தற்போது ராணுவ தளபதியாக இருக்கும் லெப்டினண்ட் ஜெனரல் தயா ரத்னாயகே நாளையுடன் ஓய்வு பெறுகிறார்.
இந்நிலையில், மேஜர் ஜெனரல் கிறிஷந்தா டி சில்வாவை தளபதியாக நியமித்து சிறிசேனா இன்று உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையின் 21-வது தளபதியாக கிறிஷந்தா டி சில்வா நாளை மறுநாள் (22-ம் தேதி) பதவி ஏற்றுக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சரணடைந்த விடுதலைப்புலிகளை சுட்டுக்கொல்ல கோத்தாவால் அனுப்பப்பட்டவா் புதிய இராணுவத் தளபதி.
வெள்ளை கொடியுடன் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களை சுட்டுக்கொல்வதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அனுப்பிய மேஜர் ஜெனரல் கிருசாந்த டி சில்வா இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். அவர் லெப்டினன் தரத்திற்கும் பதவிஉயர்த்தப்பட்டுள்ளார். தற்போதுள்ள இராணுவ அதிகாரிகளில் அனுபவம் கூடியவரான இவரையே கோத்தபாய ராஜபக்ச வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களை சுட்டுக்கொல்ல அனுப்பியிருந்தார். இதனடிப்படையிலேயே அவர் பின்னர் வெளிநாட்டு தூதுரகமொன்றிற்கு நியமிக்கப்பட்டிருந்தார்