ஜனாதிபதி, பிரதமரின் பாதுகாப்புப் பிரிவினர் மீளவும் பொலிஸ் சேவையில் இணைவு
ஜனாதிபதி மற்றும் பிரதமர் பாதுகாப்புப் பிரிவினர் மீளவும் பொலிஸ் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களின் பாதுகாப்பிற்காக கடந்த அரசாங்கம் பெரும் எண்ணிக்கையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் படையினரை கடமையில் ஈடுபடுத்தியிருந்தது.
புதிய அரசாங்கம் கொள்கை அடிப்படையில் தீர்மானம் ஒன்றை எடுத்து, இந்த பாதுகாப்பினை குறைக்கத் தீர்மானித்துள்ளது.
இவ்வாறு குறைக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக பொலிஸார் படையினர் உள்ளிட்ட 4000 அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இவர்களில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் உள்ளடங்குகினற்னர்.
படையினர் மீளவும் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் உத்திர்யோகத்தர்களில் ஆயிரம் பேர் மட்டும் தொடர்ந்தும் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
எஞ்சிய உத்தியோகத்தர்கள் வழமையான பொலிஸ் கடமைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயன்படுத்திய பாதுகாப்பு உத்தியோகத்தர்களில் நான்கில் ஒரு பகுதியினரே தற்போதைய ஜனாதிபதி பயன்படுத்த உள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் சில அமைச்சர்களுக்கு 30 முதல் 50 வரையிலான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட போதிலும் தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை ஆறாக வரையறுக்கப்பட்டுள்ளது.
அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை குறைத்து, அவர்களை பொதுமக்கள் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொழும்பு விஜேராம வீதியில்
அமுதலமைச்சர் பதவி எனக்கு வேண்டும்! அடம்பிடிக்கும் ஷசீந்திர ராஜபக்ஷ
ஊவா மாகாண சபை முதலமைச்சராக ஹரீன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டதை ரத்துச் செய்யுமாறு கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளார்.
முறையற்ற நியமனம் தொடர்பில் ‘ரிட்’ உத்தரவொன்றை வழங்குமாறு கோரி முன்னாள் முதலமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் ஊவா ஆளுநர் என்.ஜீ.ஜயதிஸ்ஸ, ஊவா முன்னாள் ஆளுநர் நந்த மெதீவ், ஊவா முதலமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ சட்டமா அதிபர் உட்பட 34 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கடந்த ஊவா மாகாண சபை தேர்தலில் ஐ.ம.சு.மு. 17 ஆசனங்களை கைப்பற்றியது. கூடுதல் ஆசனங்களை பெற்ற கட்சியின் சார்பில் மனுதாரர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ஆனால் மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் ஆளுநருக்கு வழங்கிய சத்தியக் கடதாசியின் பிரகாரம் ஹரீன் பெர்ணாந்து முதலமைச்சராக நியமிக்ப்பட்டுள்ளார். ஆனால் தொடர்ந்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே பெரும்பான்மை பாலமிருக்கிறது. ஹரீன் பெர்னாந்துவை முதலமைச்சராக நியமித்தது சட்ட விரோதமாகும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மையப் பெற்றுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலமே மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்படவுள்ளது.