எந்த நேரத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்க முடியும்:இலங்கையில் மரண தண்டனை மீண்டும் அமுல்?
03 Feb,2015
இலங்கையில் மரண தண்டனை மீண்டும் அமுல்?
நாட்டில் குற்றச்செயல்களின் சதவீதம் அதிகரிக்குமாயின் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் ஆலோசிக்கும் என்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் மரண தண்டனை உள்ளடக்கப்பட்டிருந்தாலும், 1976 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதிக்கு பின்னர் எவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
1976 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் திகதியே இறுதியாக இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
2002 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி வரை மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
எந்த நேரத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என முன்னாள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த அரசாங்கத்தை கவிழ்க்கும் அதிகாரம் எம்மிடம் காணப்படுகின்றது. எந்தவொரு நேரத்திலும் அரசாங்கத்தை கைப்பற்ற எமக்கு முடியும்.
நாடாளுமன்றில் கையொப்பங்களை திரட்டி எங்களுக்கு தேவையான ஒருவரை பிரதமராக முடியும். எங்களுக்கு தேவையானவர்களை அமைச்சர்களை நியமிக்க முடியும்.
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கௌரவமளிக்கும் நோக்கில் நூறு நாள் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம்.
130க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு இன்று கண்ணீர் வடிக்கின்றனர் என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தங்காலை ரன்ன பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.