முன்னைய ஆட்சியில் கொலைகள், கொள்ளைகள், உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால்
31 Jan,2015
முன்னைய ஆட்சியில் கொலைகள், கொள்ளைகள், ஊழல்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால், தற்போதைய அரசாங்கத்தில் இருந்து விலகி விடுவோம் என்று ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் வண.ஓமல்பே சோபித தேரர்,
“இந்த அரசாங்கமும் முன்னைய அரசாங்கத்தைப் போலவே, செயற்பட்டால், கொலைகாரர்களையும், கொள்ளையர்களையும், ஊழல் செய்தவர்களையும் தண்டிக்கத் தவறினால், 100 நாள் செயற்திட்டத்துக்கு முன்னதாகவே, நாம் அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில், ஜாதிக ஹெல உறுமய அங்கம் வகிப்பதுடன், இதன் செயலாளரான சம்பிக்க ரணவக்க அமைச்சராகவும் பதவியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.