தான் நாட்டைவிட்டு தப்பிச்சென்று விட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்த கருத்து தவறானது எனவும் நாட்டைவிட்டு செல்வதற்கான எண்ணம் தனக்கு இல்லை எனவும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரான குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கே.பி., தெரிவித்ததாக தமிழ் மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
தான் கிளிநொச்சியிலுள்ள செஞ்சோலை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் சிறுவர்களை பராமரிக்கும் தன்னுடைய பணியினை செய்து வருவதாகவும் தான் நாட்டை விட்டு ஒருபோது தப்பிச்செல்ல மாட்டேன் எனவும் கே.பி. தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரான குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கே.பி, அதிவிசேட பிரமுகர்கள் பயணிக்கும் நுழைவாயின் ஊடாக நாட்டை விட்டு தப்பிச்சென்றுவிட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கே.பி., தப்பிவிட்டார்: ராஜித்த எம்.பி தகவல்
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரான குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கே.பி, அதிவிசேட பிரமுகர்கள் பயணிக்கும் நுழைவாயின் ஊடாக நாட்டை விட்டு தப்பிச்சென்றுவிட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் நுழைவாயில் வழியாக அவர், சிறிலங்காவை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் வைத்து சிறிலங்கா கைது செய்யப்பட்ட கே.பி சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பில், இருந்து வந்தார்.
புதிய அரசாங்கம் பதவியேற்றால், அவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முன்னதாக ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.
இந்தநிலையிலேயே அவர் மகிந்த ராஜபக்ச தோல்வி கண்டநிலையில், நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், அவர் எங்கு சென்றார் என்ற விபரத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன வெளியிடவில்லை.
உண்மையில் கே.பி இலங்கையைவிட்டு வெளியேறினால்ஸ
புலிகளியக்கத்தை மீண்டும் உயிர்ப்பிப்பாரா?
புலம்பெயர் தேசங்களில் புலிகளின் பெயரில் பணம் சேர்த்து மில்லியனர்களாக வலம்வரும் சுத்துமாத்து தமிழ்தேசிய வாதிகளை வெளிச்சத்துக்கு கொண்டுவருவாரா?
புலிகளின் தலைவர் மகிந்தவிடம் எவ்வளவு பணம் வாங்கினார் என்பதை வெளிப்படுத்துவாரா?
புலிகளின் தலைவருக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதுபோன்ற விடயங்கள் கே.பிக்ககு மட்டுமே தெரிந்தவையாகும்.
இவற்றுகெல்லாம் விடைகிடைக்குமா?
இராணுவ, கடற்படை தளபதிகள் மாற்றம்! விமானப்படை தளபதி ஓய்வு!
புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன இலங்கையின் உயர் பாதுகாப்புக் கட்டமைப்பில் பல மாற்றங்களைச் செய்யவுள்ளார் என அவருடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்பிரகாரம் தற்போதய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரட்னாயக்க மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா ஆகியோர் அப்பதவிகளில் தொடர்வதை புதிய அரசுத் தலைமை விரும்பவில்லை என்றும், அப்பதவிகளிலிருந்து தாமாகவே விலகிச் செல்வதற்கு அவர்களும் முன்வந்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர்கள் பதவிகளை விட்டு விலகியதும் அவர்களது இடங்களுக்கு புதியவர்களை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கைகளை மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, விமானப் படைத்தளபதி ஏயார் மார்ஷல் கே.ஏ.குணதிலக எதிர்வரும் 19ம் திகதி ஓய்வுபெறவிருக்கின்றார். அதுவரை அவரை அப்பதவியில் தொடர அனுமதித்து, அதன் பின்னர் தமது நம்பிக்கையான மூத்த விமானப்படை அதிகாரி ஒருவரை அப்பதவிக்கு புதிய ஜனாதிபதி நியமிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஓய்வுக்குரிய காலம் கடந்த பின்னரும் இரண்டு தடவைகள் பதவி நீடிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்கவை பதவி விலகிச் செல்லுமாறு புதிய அரசுத் தலைமை கோரியிருக்கிறது என்றும் தெரிகிறது.
எனினும் பொலிஸ்மா அதிபர் எம்.கே. இலங்கக்கோன் அப்பதவியில் தொடர்வதை புதிய ஜனாதிபதி விரும்புகிறார் என்றும் கூறப்பட்டது.