கொலைக்குற்றவாளிகளுக்கு சுதந்திரம், இலங்கை நான்காம் இடம்! ஆசியாவின் ஆச்சரியம்
05 Jan,2015
கொலைக்குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடித் திரியும் சூழ்நிலை உள்ள நாடுகளில் இலங்கை நான்காம் இடத்தில் இருப்பதாக புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது.
இதன் மூலம் கொலை போன்ற படுபாதக செயல்களில் ஈடுபடுவோர் கூட தப்பித்துக் கொள்ளும் அளவுக்கு சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்து, அராஜகத்தின் ஆட்சி நிலவும் நாடுகளில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது.
சட்டம் தன் கடமையைச் செய்வதற்கான சூழல் இல்லாத நாடுகள் சர்வதேச மட்டத்தில் தனிமைப்படுத்தப்படுவதுடன், அந்நாடுகளின் மக்கள் எதிர்வரும் காலங்களில் வெளிநாடுகளுக்கான பயணங்களை மேற்கொள்வதிலும் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.
மேலும் அந்நிய முதலீடு, வெளிநாட்டுக்கடன் என்பவற்றிற்கும் குறித்த சூழ்நிலை தடையாக அமையும் வாய்ப்பும் உள்ளதாக குறித்த சர்வதேச ஆய்வின் முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.