தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்களை இந்தியாவிற்கு அனுப்ப முடிவு!
10 Nov,2014

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு சிறிலங்கா நீதிமன்றத்தினால் சென்ற மாதம் 30ஆம் திகதி மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட தமிழக மீனவர்கள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் பேசியதற்கிணங்க அவர்கள் இந்தியாவிற்கு அனுப்பிவைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி மீனவர்கள் விவகாரம் தொடர்பில் மீண்டும் மோடி நேற்று தொலைபேசிமூலம் மஹிந்தவுடன் பேசியதாகவும் அதன் பின்னர் அவர்களை இந்தியாவிற்கு அனுப்பி வைப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கை செல்லவுள்ள பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சுவாமி அவர்களை அழைத்துவரவுள்ளதாக செய்தியாளர்களிடம் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.