ஐரோப்பிய யூனியனுடன் மோத தயாராகும் அரசு! தடைநீக்கத்துக்கு எதிராக வழக்கு
19 Oct,2014
விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐரோப்பிய யூனியனுக்கு எதிராக வழக்குத் தொடர அரசு உத்தேசித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் ஊடாகவே இந்த வழக்குத் தொடுக்கப்படவுள்ளது.
வெளிவிவகார அமைச்சுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் சட்டத்தரணிகள் தற்போது இது தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடைநீக்கத்துக்கு எதிராக ராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபடவும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான மனோபாவத்தை கூர்தீட்டி,சிங்கள வாக்குகளை அள்ளும் திட்டமொன்றை அரசாங்கம் வகுத்துள்ளது.
இதற்கிடையே எதிர்வரும் நாட்களில் இலங்கையின் பாதுகாப்பு தொடர்பானது என்ற போர்வையில் கடுமையான சில நடவடிக்கைகளை அரசுத் தரப்பு மேற்கொள்ளக் கூடும் என்ற தகவல்களும் கசிந்துள்ளன.