புலிகள் பயங்கரவாதிகள் என்பதனை நிரூபிக்க முடியும்! இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திடம் அறிவிப்பு
18 Oct,2014
தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்பதனை நிரூபிக்க முடியும ;என இலங்கை அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியத்திடம் அறிவித்துள்ளது.
நேற்று உத்தியோகபூர்வமாக இலங்கை அசாங்கம் இதனை அறிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டனர்.
அது தொடர்பான தகவல்களை சமர்ப்பிக்கத் தயார்.
தமிழீ விடுதலைப் புலிகள் 171 அரசியல்வாதிகளை படுகொலை செய்துள்ளனர்.
12 பேரூந்துகள் மீது குண்டுத் தாக்குதல், 21 கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி மக்களை கொலை செய்தல் உள்ளிட்ட 3000 ற்கும் மேற்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாச உள்ளிட்டவர்களை படுகொலை செய்தல்.
இராணுவ அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட படையதிகாரிகளை கொலை செய்தல் என பல்வேறு குற்றச் செயல்களுடன் புலிகளுக்கு தொடர்பு உண்டு என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை தளர்த்துவது தொடர்பில் விடுத்த அறிவிப்பினைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.