இலங்கை தொடர்பிலான நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனவும், கொள்கைகளில் மாறப்போவதில்லையெனவும் அமெரிக்கா தெரிவித்துளள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜென் ப்சான்கி இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டு, அங்கு அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியைச் சந்தித்து நாடு திரும்பிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை தொடர்பில் அமெரிக்கா கடைபிடிக்கும் கொள்கையில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், அது நெகிழ்ச்சித் தன்மை கொண்டதாக மாறியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்கா இதை மறுத்திருக்கிறது. நேற்று இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜென் ப்சான்கி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இனங்களுக்கும், மதங்களுக்கும் இடையில் முறுகலைத் தவிர்த்து, ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் அமெரிக்கா என்றும் அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு விசா வழங்க அமெரிக்கா மறுப்பு
இலங்கையின் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவர், விசா தொடர்பாக தாக்கல் செய்த மேன்முறையீட்டை அமெரிக்க நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபரான பிரேமதாச உடுகம்பொல, அமெரிக்காவில் விசா வழங்குமாறு கோரி தாக்கல் செய்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன.
மூன்று தடவைகள் விண்ணப்பித்திருந்ததாகவும் அவை அனைத்தையும் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து விசா வழங்குமாறு கோரி மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட அமெரிக்க நீதிமன்றம், வீசா வழங்குவதற்கு முடியாது என அறிவித்துள்ளது.
உடுகம்பொல மீது 1980களில் ஜே.வி.பி கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு கடுமையான வழி முறைகளை பின்பற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோத படுகொலைகளுடன் தொடர்புடைய ஒருவருக்கு அமெரிக்க விசா வழங்கப்பட முடியாது என அமெரிக்க நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உடுகம்பொலவின் மனைவி மற்றும் நான்கு பிள்ளைகளுக்கு அமெரிக்கப் பிரஜை உரிமை வழங்கப்பட்டுள்ளது.