ஐ.நா.பொதுச்சபை கூட்டத்தில் ராஜபக்சே பேச்சு "தவறான அபிப்பிராயங்களால் இலங்கை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது"
ஐ.நா.பொதுச்சபை கூட்டத்தில் பேசிய இலங்கை அதிபர் ராஜபக்சே, துரதிருஷ்டவசமாக தவறான அபிப்பிராயங்களால் தங்கள் நாடு பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக கூறினார்.
மனித உரிமை மீறல்கள்
இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது அப்பாவி தமிழர்கள் ஏராளமான பேர் ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இதற்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்தன.
அப்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றியும் போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. ஆனால் சர்வதேச குழுவினரை விசாரணைக்கு அனுமதிக்க முடியாது என்று இலங்கை கூறி வருகிறது.
ஐ.நா. சபையில் ராஜபக்சே பேச்சு
இந்த நிலையில், நியூயார்க் நகரில் தற்போது ஐ.நா. பொதுச்சபையின் 69–வது கூட்டம் நடைபெற்று வருகிறது. இலங்கை ராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதால், இந்த கூட்டத்தில் ராஜபக்சே பேச அனுமதிக்கக்கூடாது என்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் மற்றும் தமிழ் அமைப்புகளும் வற்புறுத்தி வந்தன.
ஆனால் திட்டமிட்டபடி, ராஜபக்சே ஐ.நா.பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
தவறான அபிப்பிராயம்
இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த குறுகிய 5 ஆண்டு காலத்தில் மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை அரசு மும்முரமாக செய்து வருகிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக, மனித உரிமை கவுன்சிலில் உள்ள சிலரின் தவறான அபிப்பிராயங்களால் இலங்கை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
போருக்கு பின் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளை அவர்கள் சரியாக கவனத்தில் கொள்ளாமல் தாங்களாகவே ஒரு முடிவுக்கு வந்து விடுகிறார்கள். போருக்கு பின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் நடுநிலை தவறிய கண்ணோட்டத்தால் எங்கள் நாடு குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கிறது. மனித உரிமைகள் விவகாரத்தில் முரணான அணுகுமுறையையே இது காட்டுகிறது.
மாறவேண்டும்
சம்பந்தப்பட்ட நாட்டில் நிலவும் சூழ்நிலைகள், அங்குள்ள பிரச்சினைகள் போன்றவற்றை புரிந்து கொள்ளாமல் சிலர் தங்களுடைய சொந்த திட்டத்தை நிறைவேற்றும் நோக்கத்தில் மனித உரிமைகள் என்பதை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.
மாறபட்ட இந்த உலகில் சர்வதேச அளவில் அமைதி, பாதுகாப்பு மற்றும் வளத்தை ஏற்படுத்துவதில் ஐ.நா.சபையின் பங்கு முக்கியமாக உள்ளது. அதே சமயம் பாகுபாடு அற்ற அணுகுமுறையுடன் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் பெறுவது அவசியம் ஆகும். எனவே நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் தற்போது செயல்படும் விதம் குறித்து புதிதாய ஆய்வு செய்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது.
அரசியல்
ஐ.நா.சபையின் செயல்பாடு அரசியல்மயம் ஆகிவிட்டது. எனவே சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம் ஆகும்.
ஐ.நா.சபை அமைப்புகள் பிரச்சினைகளை புரிந்து கொண்டு அவற்றுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு அரசாங்கங்களுடன் ஒத்துழைப்பு அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய அணுகுமுறையின் மூலம் சர்வதேச அளவில் ஏற்படும் சவால்களுக்கு தீர்வுகளை காணலாம்.
இவ்வாறு ராஜபக்சே கூறினார்.
இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது அப்பாவி தமிழர்கள் ஏராளமான பேர் ராணுவத்தால் கொல்லப்பட்டனர்.
இதற்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்தன.அப்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றியும் போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. ஆனால் சர்வதேச குழுவினரை விசாரணைக்கு அனுமதிக்க முடியாது என்று இலங்கை கூறி வருகிறது.
இந்த நிலையில், நியூயார்க் நகரில் தற்போது ஐ.நா. பொதுச்சபையின் 69–வது கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்ட ராஜபக்சே ஐ.நா.பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த குறுகிய 5 ஆண்டு காலத்தில் மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை அரசு மும்முரமாக செய்து வருகிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக, மனித உரிமை கவுன்சிலில் உள்ள சிலரின் தவறான அபிப்பிராயங்களால் இலங்கை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
போருக்கு பின் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளை அவர்கள் சரியாக கவனத்தில் கொள்ளாமல் தாங்களாகவே ஒரு முடிவுக்கு வந்து விடுகிறார்கள்.
ஐ.நா.சபையின் செயல்பாடு அரசியல்மயம் ஆகிவிட்டது. எனவே சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம் ஆகும்.இவ்வாறு ராஜபக்சே கூறினார்