ஐக்கிய நாடுகள் சபையின் பொது அமர்வு நடைபெறும் போது இலங்கை ஜனாதிபதி, இந்திய பிரதமரை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெறவுள்ளது. பொது விவாதம் செப்டம்பர் 24ம் திகதி இடம்பெறும்.
இந்தநிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செப்டம்பர் 25ம் திகதியன்று ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றவுள்ளார்.
இந்தநிலையில் அங்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவும் பொது அமர்வுக்கு புறம்பாக சந்திப்பை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அண்மையில் புதுடில்லியில் தாம் கலந்தாலோசித்த விடயங்களை மோடி, மஹிந்தவுடன் பகிர்ந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.]]
ஜனாதிபதி இஷ்டம் போல் செலவு! அமைச்சர்களுக்கு கடும் கட்டுப்பாடு
அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களின் போது செலவுகளைச் சிக்கனப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சுற்றறிக்கையொன்றை அனுப்பியுள்ளார்.
அண்மைக்காலமாக ஜனாதிபதியின் நாளாந்த செலவுகள் மற்றும் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவுகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.
இந்நிலையில் இதனை திசை திருப்பும் நோக்கில் தற்போது அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
“அரச நிதியை சிக்கனப்படுத்தலும், முகாமைத்துவப்படுத்தலும்” என்ற தலைப்பில் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களின் போது அழைத்துச் செல்லும் நபர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் இந்த சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக இந்த சுற்றறிக்கை அனைத்து அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள், அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கும் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரின் செலவு ஊதாரித்தனமாக இருப்பதாகவும், அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஆளுங்கட்சிக்குள் சலசலப்புகள் தோன்றியுள்ளன
இலங்கையுடன் இந்தியா உறவை பேணவேண்டியது அவசியம்!- வெங்கையா நாயுடு
இந்தியாவை பொறுத்தவரை இலங்கையுடன் நட்பு ரீதியான உறவை வைத்திருக்க வேண்டியது அவசியம் என்று இந்திய நகர அபிவிருத்தி மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதியமைச்சர் எம் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றிடம் இந்தக் கருத்தை அவர் நேற்று தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் இலங்கை கொண்டிருக்கும் உறவு குறித்த கேட்ட போது இந்த பதில் அளிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக இலங்கை தமிழர் பிரச்சினை போன்ற முக்கிய விடயங்களுக்காவது இந்தியா, இலங்கையுடன் உறவை வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது என்று அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.