தடை செய்யப்பட்ட “424″ வெளிநாட்டு நபர்களை விடுவிக்க புதிய முறை அறிமுகம்
13 Aug,2014
பயங்கரவாத தடைப்பட்டியலில் இருந்து தம்முடைய பெயர்களை நீக்கிக்கொள்ள வேண்டுமாயின் அது தொடர்பில் விண்ணப்பிக்க வேண்டும்.
அத்துடன் தமது பெயர் நீக்கப்பட வேண்டியமைக்கான உரிய காரணத்தை முன்வைக்க வேண்டும் என்று இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் புதன் கிழமை (13) இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை கூறினார்.
இதே வேளை, பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக, அடையாளம் காணப்பட்டு கடந்த மார்ச் மாதம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட 424 நபர்களில் மூன்று நபர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு அது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஐ.நா பாதுகாப்பு சபையின் உறுப்புரைக்கு அமைவாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த பட்டியலில் இருந்து தமது பெயரை நீக்குமாறு மூவர் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் தொடர்பில் ஆராய்ந்து உண்மைதன்மை தொடர்பில் கண்டறியப்பட்ட பின்னர் வெளிவிவகார அமைச்சின் உத்தரவுக்கு அமைய குறித்த மூவரும் நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.